பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தில் 3,258 தொழிலாளர்கள் – பணியாளர்களுக்கு 20% போனஸ்: மனோ தங்கராஜ் வழங்கினார்

பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தில் 3,258 தொழிலாளர்கள் – பணியாளர்களுக்கு 20% போனஸ்: மனோ தங்கராஜ் வழங்கினார்



சென்னை, அக்.17–


தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மற்றும் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியளார்கள் ஒன்றியங்களில் பணிபுரியும் 3,258 தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 2024–-2025–ம் ஆண்டிற்கான மிகை ஊதியம் மற்றும் கருணை தொகையினை பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் வழங்கி தொடங்கி வைத்தார்.


முதலமைச்சர், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மற்றும் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியளார்கள் ஒன்றியங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 2024–-2025 ஆம் ஆண்டிற்கான மிகை ஊதியம் 8.33 விழுக்காடு மற்றும் 11.67 விழுக்காடு கருணை தொகை என மொத்தம் 20 விழுக்காடு மிகை ஊதியம் மற்றும் கருணை தொகை வழங்க ஆணையிட்டுள்ளார்.


அதனைத்தொடர்ந்து, பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் சென்னை, நந்தனம் ஆவின் இல்லத்தின் அலுவலகக் கூட்டரங்கில் சி மற்றும் டி தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மற்றும் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியளார்கள் ஒன்றியங்களில் பணிபுரியும் 3,258 பணியாளர்களுக்கு 2024–-2025–ம் ஆண்டிற்கான ரூ.4.74 கோடி மிகை ஊதியம் மற்றும் கருணை தொகையினை வழங்கிடும் வகையில் 18 பணியாளர்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.


இந்நிகழ்வில், பால்வளத்துறை ஆணையர் அ.ஜான் லூயிஸ், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%