பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணச் செலவு: 4 ஆண்டுகளில் ரூ.295 கோடி

பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணச் செலவு: 4 ஆண்டுகளில் ரூ.295 கோடி

புதுடெல்லி,


பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு பயணங்கள் மற்றும் அதற்கான செலவினங்கள் குறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி கீர்த்தி வர்தன் சிங் எழுத்து மூலம் பதிலளித்தார்.


பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்கள் மற்றும் அதற்கான செலவினங்கள் குறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி கீர்த்தி வர்தன் சிங் எழுத்து மூலம் பதிலளித்தார்.


அதில் அவர், கடந்த 2021-ம் ஆண்டு முதல் 2024 வரை பிரதமர் மோடி மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களுக்கான செலவு சுமார் ரூ.295 கோடி என தெரிவித்து இருந்தார். மேலும் இந்த ஆண்டு அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் உள்பட 5 நாடுகளுக்கு அவர் மேற்கொண்ட பயணங்களுக்கு ஆன செலவு ரூ.67 கோடி எனவும், மொரீஷியஸ், சைப்ரஸ், கனடா, குரேஷியா, கானா, டிரினிடாட்-டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில், நமீபியா போன்ற நாடுகளுக்கு இந்த ஆண்டு அவர் மேற்கொண்ட பயணச்செலவு குறித்த விவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை என்றும் அதில் கூறப்பட்டு உள்ளது.


இந்தப் பயணங்களில், மிகவும் அதிகமானது பிரான்சுக்கு ரூ.25 கோடிக்கு மேல் செலவானது என்றும், அதே நேரத்தில் ஜூன் 2023 இல் மோடி அமெரிக்காவிற்கு மேற்கொண்ட பயணத்திற்கு ரூ.22 கோடிக்கு மேல் செலவானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%