பிள்ளையார்பட்டி ஶ்ரீ கற்பக விநாயகர் திருக்கோவிலில், சதுர்த்தி விழா தேரோட்டம்

பிள்ளையார்பட்டி ஶ்ரீ கற்பக விநாயகர் திருக்கோவிலில், சதுர்த்தி விழா தேரோட்டம்

! ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து வழிபாடு! 


திருப்பத்தூர்


சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டி அமைந்துள்ள உலகப் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ

கற்பக விநாயகா் திருக்கோவிலில விநாயகர் சதுர்த்தி

பெருவிழாவை முன்னிட்டு திரு தேரோட்ட விழா நடைபெற்றது இவ்விழா கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது பத்து நாட்கள் நடைபெறும். இவ்விழாவில் உற்சவர் கற்பக விநாயகர் வெள்ளி மூஷிகம் யானை குதிரை கமலம் ரிஷபம் பூதம் மற்றும் சிம்ம வாகனத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார் இவ்விழாவின் சிகர நிகழ்ச்சியான ஒன்பதாம் திருநாளில் உற்சவர் கற்பக விநாயகர் பிட்டுக்கு மண் சுமந்த அலங்காரத்தில் பெரிய தேரில் எழுந்தருளி பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார் முன்னதாக திருநாள் மண்டபத்தில் உற்சவர் விநாயகப் பெருமானும் ஸ்ரீ சண்டிகேஸ்வரர் சுவாமியும் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளினார்கள் தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்று கோபுர தீபம் கும்ப தீபம் நாகதீபம் காண்பித்து ஷோடச உபசாரங்கள் நடைபெற்றன இதனைத்தொடர்ந்து மலர்களால் அர்ச்சனைகள் செய்து மகா தீப ஆராதனை காண்பிக்கப்பட்டன பின்னர் பக்தர்கள் தெய்வங்களை தோளில் சுமந்து அலங்கரிக்கப்பட்ட பெரியதேரில் விநாயகர் பெருமானையும் புதிதாக இந்த ஆண்டு செய்யப்பட்ட சிறிய தேரில் ஸ்ரீ சண்டிகேஸ்வர ஸ்வாமியை எழுந்தருள செய்தனர் பின்னர் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்று கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டவுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்று சேர்ந்து தேரை வடம் படித்து இழுக்க தொடங்கினர். சிறிய தேரை பெண்களும் சிறியவர்களும் பின் தொடர்ந்து இழுத்து சிறிது தூரம் சென்றதும் மழை கொட்டியதால் பக்தர்கள் உற்சாகத்துடன் மழையில் நனைந்தபடி தேரை இழுத்தனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%