புதுச்சேரியில் இனி அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.1000
Jul 28 2025
14

புதுச்சேரி, ஜூலை 29-
புதுச்சேரி மாநிலத்தில் 21 வயதுக்கு மேல் 55 வயதுக்குள் இருக்கும், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மகளிர்களுக்கு மாதம் தோறும் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகையானது அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், புதுச்சேரியில் நேற்று நடந்த அரசு விழாவில் பேசிய முதல்வர் ரங்கசாமி, புதுச்சேரி மாநிலத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மகளிர்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, இந்தத் திட்டத்தை விரிவுப்படுத்தும் விதமாக புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து மகளிர்களுக்கும் மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்பட உள்ளது என்று தெரிவித்தார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?