பூந்தமல்லி அருகே வீடு புகுந்து பெண்ணை ஆபாசமாக படம் எடுத்து நகை பறிப்பு: கோவையில் வாலிபர் கைது
சென்னை, ஆக. 13–
பூந்தமல்லி அருகே வீடு புகுந்து, திருப்புளியை காட்டி தனியாக இருந்த இளம்பெண்ணை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி, 11 சவரன் நகையை பறித்து தப்பிய ஓடிய இளைஞரை, கோவை விமான நிலையத்தில் போலீசார் கைது செய்தனர்.பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை பகுதியில் உள்ள ஒரு வீட்டில், கடந்த 7ம் தேதி புகுந்த மர்ம நபர், வீட்டில் தனியாக இருந்த 25 வயது இளம்பெண்ணை திருப்புளியை காட்டி மிரட்டி, நிர்வாணமாக்கி உள்ளார். சமூக வலைதளம் கயிற்றால் கையை கட்டி பாலியல் தொல்லை கொடுத்து, மொபைல் போனில் வீடியோ எடுத்துள்ளார். மேலும், 11 சவரன் நகையை பறித்தார். இது குறித்து போலீசில் தெரிவித்தால், வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துவிடுவதாக மிரட்டி, தப்பி சென்றார்.இது தொடர்பாக பாதிக்கப்பட்ட இளம்பெண், நசரத்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். நசரத்பேட்டை போலீசார், தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். சம்பவத்தில் ஈடுபட்டது, சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த அஜய்குமார், 25, என்பது தெரிய வந்தது.கோயம்புத்துார் விமான நிலையத்தில் வைத்து, அஜய்குமாரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
சென்னை, நசரத்பேட்டை காவல் நிலையத்திற்கு நேற்று அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். போலீசார் நடத்திய விசாரணையில், தண்டையார்பேட்டையில் ஹோட்டல் நடத்தி வந்த அஜய்குமார், 'ஆன்-லைன்' சூதாட்டம் மற்றும் மதுப்பழக்கத்தால் பணத்தைஇழந்துள்ளார். தொழிலிலும் நஷ்டம் ஏற்படவே, ஹோட்டலை மூடியுள்ளார். எலும்பு முறிவு அந்தவகையில், 10 லட்சம் ரூபாய் கடன் ஏற்பட்டுள்ளது. கடனை அடைப்பதற்காக, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். நசரத்பேட்டையில் கொள்ளையடித்த நகைகளை, கோவையில் உள்ள நண்பருக்கு கூரியர் மூலம் அனுப்பி உள்ளார். மேலும், போலீசாரிடம் பிடிபடாமல் இருக்க எங்கும் தங்காமல், ரயிலில் பயணித்தபடி இருந்தார். இந்த நிலையில், போலீசார் தன்னை நெருங்குவதை அறிந்து, விமானத்தில் கோவை சென்றுள்ளார். நண்பரிடம் நகைகளை பெற்று, அதில் சிலவற்றை விற்றுள்ளார். பின் விமானத்தில் வெளியூர் செல்ல, கோவை விமான நிலையத்திற்கு சென்றது தெரியவந்தது.
போலீசார் தப்பிக்க முயன்றபோது கீழே விழுந்ததில், அவரது வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அஜய்குமாரிடம் இருந்து நகைகள் மீட்கப்பட்டுள்ளன.அஜய்குமார் மீது பெண் வன்கொடுமை, பாலியல் அத்துமீறல், கொள்ளை என, 10க்கும் மேற்பட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.