பெல்ஜியத்தில் மக்கள் நலத்திட்டங்களுக்கான நிதி வெட்டு அரசைக் கண்டித்து 1.4 லட்சம் தொழிலாளர்கள் பிரம்மாண்டப் பேரணி
Oct 17 2025
15

பிரஸ்ஸல்ஸ், அக். 16 - பெல்ஜியம் அரசு பொரு ளாதார நெருக்கடிகளை சரி செய்வ தற்கு மாறாக சிக்கன நடவடிக்கை கள் என்ற பெயரில் நலத்திட்டங் களுக்கான நிதியை வெட்டியுள்ளது. இதனைக் கண்டித்து தொழிற் சங்கங்களின் தலைமையில் சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் தொழி லாளர்கள் அந்நாட்டு தலைநகர் பிரஸ்ஸல்ஸ் வீதிகளில் திரண்டு பிரம்மாண்ட பேரணி நடத்தினர். அந்நாட்டின் கடந்த சில ஆண்டுகளில் நடந்த மிகப் பெரிய தொழிலாளர் போராட்டங்களில் ஒன்றாக இது இடம் பெற்றுள்ளது. பார்ட் டி வெவர் தலைமையிலான அரசாங்கம் பணியிடப் பாது காப்புகளைக் குறைப்பது, வரு மானத்தை முடக்குவது என சமூக நலத்திட்டங்களைக் குறைக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. அதே நேரத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மக்கள் வரிப்பணத்தில் டிரோன்கள், போர் விமானங்கள் என ராணுவத்திற்காக ஆயுதங் கள் வாங்க மட்டும் செலவு செய்து வருகிறது. இதனால் அந்நாட்டு மக் கள் மேலும் அதிக வாழ்க்கைச் செலவுகளையும் பொருளாதார நெருக்கடிகளையும் எதிர்க் கொண்டு வருகிறார்கள். இந்த நடவடிக்கைகளால் பாதிக்கப்படும் பிரிவில் பெண்களே அதிகமாக உள்ளனர் என போராட்டத்தை ஒருங்கிணைத்த தொழிற்சங்கங்களும், தொழிலாளர் கட்சிகளும் தெரிவித்துள்ளன. 2003-ஆம் ஆண்டுக்கு முன் மகப் பேறு விடுப்பு எடுத்த ஆயிரக்கணக் கான பெண்கள், அதற்கான ஆவ ணங்களைக் காட்ட முடியாவிட்டால், அவர்களின் ஓய்வூதியக் கணக் கீட்டில் அந்த விடுப்புக் காலம் சேர்க் கப்படாது. அந்த காலத்திற்கான பணப்பலன்கள் அவர்களுக்கு கிடைக் காது என அரசு தெரிவித்துள்ளது. இந்த விடுப்புக்கான ஆதாரத்தை கொடுக்க வேண்டும் என, ஒரு சுமை யை பெண்கள் ஏற்க வேண்டும் என்று அரசாங்கம் வேண்டுமென்றே திட்டமிட்டுக் கேட்கிறது. இது பாரபட்சமான மற்றும் உள்நோக்கத் துடன் கூடிய முடிவு என தொழி லாளர்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். குறிப்பாக இளம் ஊழியர் களுக்கு இரவு நேரப் பணிக்கான பாதுகாப்பை அரசு கைவிட்டுள் ளது. ஓய்வு பெற்ற மற்றும் ஓய்வு பெறும் நிலையில் உள்ள தொழி லாளர்களுக்கான ஓய்வூதியம் குறைக்கப்படும் அபாயமும் உரு வாகியுள்ளது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?