பொற்சித்திரம் !

பொற்சித்திரம் !



வண்டியை ஓரம் கட்டிவிட்டு கீழிற ங்கிய பிரபாகர் பில்லியனில் இருந்து இறங்கிய நண்பன் சேகரிடம் ஆவலு டன் கேட்டான். " ஆள் எப்படி...சும்மா கும்முன்னு இல்ல ?" 


" பேஷ் பேஷ் ! சூப்பர் ! ஆமாம், ஆத் மார்த்தமான காதலா ?" நம்ப முடியா மல் கேட்டான் சேகர்.


" யெஸ், மனப்பூர்வமான காதல்." 


" அது சரி, நீ காதலிக்கிறது அதுக்குத் தெரியுமா ?" 


" தெரியாது. நான் காதலிக்கற விஷயத்தை இன்னும் வாயைத் திறந்து அவள் கிட்டச் சொல்லல்ல. இன்னொரு விஷயம். அவளைப் பத்தி ஒரு கவிதையே எழுதியிருக்

கேன். "


" ஓ, கவிதை வேற எழுதியிருக்கியா?"


" ஆமாம் சொல்றேன் கேளு.." என்ற

வன் தொடர்ந்தான். " முத்துப் பல்ல ழகி ; வசீகர உதட்டழகி ; கன்னச் சிவப் பழகி ; கிளி மூக்கழகி ; கயல் விழிய ழகி ; நெற்றிப் பொட்டழகி ; சுருள்முடி அழகி ; அன்னநடையழகி ; மொத்தத் தில் நீ ஒரு நடமாடும் பொற்சித்திரம்.

 எப்படி ?" 


" சூப்பர் ! ஆனால் நீ சொன்ன கவிதை

க்கு உன்னோட ஆள் ஏற்றதல்ல." 


" என்ன சொல்றே ?" 


" யெஸ். நீ லோக்கல் டிரேயின்ல 

ஜர்ணி பண்றதில்லையா ?" 


" இல்லை. எனக்குதான் டூ வீலர் இருக் குதே. நான் ஏன் லோக்கல் டிரேயின்ல ஜர்னி பண்றேன் ?" 


" அதான் உனக்கு ஆள் தராதரம் தெ

ரியல்ல. அந்த ஆள் அவளும் கிடை யாது ; அவனும் கிடையாது. இரண்டு க்கும் இடைப்பட்டது ! இப்போச் சொ

ல்லு, உன் கவிதை அதுக்குப் பொருந் 

துமான்னு ?" 


"வாட்..." அதிர்ச்சியில் வாய் பிளந் தான் பிரபாகர். " உனக்கெப்படி தெரியும் ?" குரலில் ஏமாற்றம் வழிந் தோடியது !


" நான் அடிக்கடி தாம்பரத்தில் உள்ள என் அக்கா வீட்டுக்கு ட்ரெயினுல போறது வழக்கம். அப்போ நீ காண் பிச்ச ஆள் நாலஞ்சு பேரோட கம்பா ர்ட்மண்டுல பார்த்திருக்கேன். கையா ல க்ளாப் பண்ணி டான்ஸ் ஆடிக்கி ட்டே காசு வசூல் பண்ணும். கூடவே பாட்டுவேற ! ஆம்பிளை குரல். குரல் மட்டும் சரியா இருந்ததுன்னு வச்சிக் குவோம் அசல் பொற்சித்திரம்தான்." 


" அட ராமா ! நான் ஏதேதோ கோட்டைக் கட்டியிருந்தேன். புஸ்ஸூன்னு ஆகிடிச்சே !" பிரபாகர் மனசொடிந்து போனான்.


சேகர் புன்னகை புரிந்தான். "நண்பா, கண்ணால் காண்பதும் பொய் ; கா தால் கேட்பதும் பொய் ; தீர விசாரிப் பதே மெய் அப்படின்னு சும்மாவா சொல்லியிருக்காங்க ! இப்போ நீ 

ஆளைக் காண்பிச்சு என் கிட்ட விசா

ரிச்சது நல்லதாப் போச்சு. சரி, வண் 

டியை எடு." 


மெளனமாக வண்டியை பிரபாகர் ஸ்டார்ட் செய்ய பின்னால் ஏறி அமர்ந்தான் சேகர். பிரபாகரனின் 

எக்ஸ் லவ்வரும் அன்ன நடை பயின் 

றவாறு ரயில்வே ஸ்டேனை நோக்கிச் 

சென்றது ! 



-வி.கே.லக்ஷ்மிநாராயணன் 

           

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%