மகளிர் ஆசிய கோப்பை கால்பந்து: ‘சி’ பிரிவில் இடம் பெற்றது இந்திய அணி

மகளிர் ஆசிய கோப்பை கால்பந்து: ‘சி’ பிரிவில் இடம் பெற்றது இந்திய அணி

புதுடெல்லி:

ஆசிய கால்​பந்து கூட்​டமைப்பு சார்​பில் மகளிருக்​கான ஆசிய கோப்பை கால்​பந்து தொடர் வரும் 2026-ம் ஆண்டு மார்ச் 1 முதல் 21-ம் தேதி வரை ஆஸ்​திரேலி​யா​வில் நடை​பெறுகிறது. 12 அணி​கள் கலந்து கொள்​ளும் இந்​தத் தொடருக்​கான ‘டி​ரா’ நிகழ்வு நேற்று சிட்​னி​யில் நடை​பெற்​றது. தொடரில் பங்​கேற்​கும் 12 அணி​களும் 3 பிரிவு​களாக பிரிக்​கப்​பட்​டுள்​ளன.


இந்​திய மகளிர் அணி ‘சி’ பிரி​வில் இடம் பெற்​றுள்​ளது. இதே பிரி​வில் முன்​னாள் சாம்​பியன்​களான ஜப்​பான், சீன தைபே மற்​றும் வியட்​நாம் அணி​களும் இடம் பெற்​றுள்​ளன. இந்​திய அணி தனது முதல் ஆட்​டத்​தில் மார்ச் 4-ம் தேதி வியட்​நா​முடன் மோதுகிறது. இந்த ஆட்​டம் பெர்த் மைதானத்​தில் நடை​பெறுகிறது. தொடர்ந்து 7-ம் தேதி ஜப்​பானுட​னும், 10-ம் தேதி சீன தைபேவுட​னும் மோதுகிறது. இந்த இரு ஆட்​டங்​களும் சிட்​னி​யில் நடை​பெறுகின்​றன. ஒவ்​வொரு பிரி​விலும் முதல் இரு இடங்​களை பிடிக்​கும் அணி​களும் 3-வது இடத்தை பிடிக்​கும் சிறந்த அணி​களில் இரண்​டும் என மொத்​தம் 8 அணி​கள் கால் இறுதி சுற்​றுக்கு முன்​னேறும்.


அரை இறு​திக்கு முன்​னேறும் 4 அணி​கள் 2027-ம் ஆண்டு பிரேசில் நாட்​டில் நடை​பெற உள்ளஃ பிபா மகளிர் உலகக் கோப்பை கால்​பந்து தொடருக்கு தகுதி பெறும். அதேவேளை​யில் கால் இறு​தி​யில் தோல்வி அடை​யும் 4 அணி​கள் பிளே ஆஃப் சுற்​றில் மோதும். இதில் 2 அணி​கள் உலகக் கோப்பை தொடருக்கு தேர்​வாகும்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%