 
    
இம்பால், அக். 30–
மணிப்பூரின் இம்பால் மேற்கு மற்றும் கிழக்கு மாவட்டங்களைச் சேர்ந்த தடை செய்யப்பட்ட வெவ்வேறு அமைப்புகளைச் சேர்ந்த பெண் உள்பட இரண்டு தீவிரவாதிகளைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.
தடைசெய்யப்பட்ட மக்கள் விடுதலை ராணுவ அமைப்பைச் சேர்ந்த ஒரு பெண் தீவிரவாதி இம்பால் மேற்கு மாவட்டத்தில் உள்ள லாங்கோல் கேம் கிராமத்தில் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டவர் நிங்தோஜம் அனிதா தேவி (44) என அடையாளம் காணப்பட்டதாக காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிரிபாம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை தீவிரவாத அமைப்பில் சேர்ப்பதில் அவர் ஈடுபட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதே போல் தடைசெய்யப்பட்ட காங்லீபாக் கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பைச் சேர்ந்த ஒருவர் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள வாங்கே ஆண்ட்ரோ பார்க்கிங் பகுதியில் கைது செய்யப்பட்டார். அவர் வாஹெங்பாம் கிரண் சிங் (45) என அடையாளம் காணப்பட்டுள்ளார். மாநிலத்தில் மிரட்டி பணம் பறித்தல், குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களைப் பிடிக்க உளவுத்துறை அடிப்படையிலான சோதனை, சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் விரிவாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நேற்று இம்பால் மேற்கு மாவட்டத்தில் உள்ள நைராங்பாம் மானிங் லூகான் பகுதியில் நடந்த நடவடிக்கையின் போது பாதுகாப்புப் படையினர் நான்கு துப்பாக்கிகளைக் கைப்பற்றினர். மேலும், 303 ரைபிள், மேகசின், இரண்டு நாட்டுத் துப்பாக்கிகள், ஒரு கைத்துப்பாக்கி மற்றும் டெட்டனேட்டர்கள் இல்லாத இரண்டு கைக்குண்டுகள் மற்றும் தோட்டாக்கள் ஆகியவற்றை கைப்பற்றினர்.
Related News
Popular News
TODAY'S POLL
 
            தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
 
                     
                                 
                                                             
                                                             
                                                             
                             
                             
                             
                             
                             
                             
                     
                     
                  
                  
                  
                  
                  
                 