மதுரை ஆதீனத்துக்கு நிபந்தனை முன்ஜாமீன்

மதுரை ஆதீனத்துக்கு நிபந்தனை முன்ஜாமீன்

சென்னை:

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர் பேட்டை சேலம் ரவுண்டானா பகுதியில் கடந்த மே 2 ஆம் தேதி சென்னை நோக்கி மதுரை ஆதீனம் வந்த காரும், சேலத்தில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற காரும் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் இருவரது காரிலும் லேசான சேதம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, இரு சமூகத்தி னர் இடையே பகையைத் தூண்டும் வகையில் பேசியதாக மதுரை ஆதீனம் மீது 4 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப் பட்ட நிலையில், உயர்நீதிமன்ற முதன்மை அமர்வு அவருக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கியது. அதன்படி, மதுரை ஆதீனம், 60 வயதுக்கு மேற்பட்ட வர் என்பதால் அவர் இருக்கும் இடத்திற்குச் சென்றுதான் காவல்துறையினர் விசாரணை நடத்த வேண்டும். காவல் துறையின் விசாரணைக்கு மதுரை ஆதீனம் ஒத்துழைக்க வேண்டும். ஒருவேளை, மதுரை ஆதீனம் தலைமறை வானால் வழக்குப் பதிவு செய்யவும் முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ரூ.10 ஆயிரத்துக்கு இரு நபர் ஜாமீனை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் சென்னை உயர் நீதிமன்ற முதன்மை அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%