மருத்துவக் கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் உயர்நிலைக் குழுவிடம் பரிந்துரை

மருத்துவக் கல்வியை மாநில  பட்டியலுக்கு மாற்ற வேண்டும் உயர்நிலைக் குழுவிடம் பரிந்துரை

சென்னை:

சுகாதாரம் மற்றும் மருத்துவக் கல்வியில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டுமானால், இவை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும் என்று தமிழக அரசால் அமைக்கப் பட்ட ஒன்றிய - மாநில உறவுகளை ஆராயும் உயர்நிலைக் குழுவிடம் பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தலை மையிலான இக்குழுவின் கூட்டம் சென்னையில் கடந்த ஆக.14 ஆம் தேதி நடைபெற்றது. இதில் மாநில திட்டக்குழு உறுப்பினர் நா.எழிலன் எம்எல்ஏ விரிவான அறிக்கையை சமர்ப்பித்தார். அறிக்கையில், “மாநிலப் பட்டியலில் இருந்த மருத்துவக் கல்வி 42 ஆவது திருத்தம் மூலம் பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது. நீட் தேர்வு காரணமாக கிராமப் புற மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களின் பிரதிநிதித்துவம் 14.9 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக குறைந்தது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%