மருத்துவமனை மீது மியான்மர் ராணுவம் தாக்குதல்: 34 நோயாளிகள் உயிரிழப்பு, 80 பேர் படுகாயம்

மருத்துவமனை மீது மியான்மர் ராணுவம் தாக்குதல்: 34 நோயாளிகள் உயிரிழப்பு, 80 பேர் படுகாயம்


 

யாங்கூன்: மி​யான்​மர் ராணுவம் நடத்​திய வான்​வழி தாக்​குதலில் பொது மருத்​து​வ​மனை தரைமட்​ட​மானது. இதில் 34 நோயாளி​கள், மருத்​துவ ஊழியர்​கள் உயி​ரிழந்​தனர். 80-க்​கும் மேற்​பட்​டோர் படு​கா​யம் அடைந்​தனர்.


மியான்​மரில் ராணுவ ஆட்சி நடை​பெறுகிறது. அந்த நாட்​டின் ராணுவ ஆட்​சிக்கு எதி​ராக பல்​வேறு கிளர்ச்​சிக் குழுக்​கள் உள்​நாட்​டுப் போரில் ஈடு​பட்டு வரு​கின்​றன. குறிப்​பாக அராக்​கன் படை, எம்​என்​டிஏஏ, டிஎன்​எல்ஏ ஆகிய 3 கிளர்ச்​சிக் குழுக்​கள் ஓரணி​யாக ஆயுத போராட்​டம் நடத்தி வரு​கின்​றன.


தற்​போதைய சூழலில் மியான்​மர் ராணுவத்​தின் கட்​டுப்​பாட்​டில் 21 சதவீத பகு​தி​களும் கிளர்ச்​சிக் குழுக்​களின் கட்​டுப்​பாட்​டில் 79 சதவீத பகு​தி​களும் உள்​ளன.


இந்த சூழலில் அராக்​கன் படை கட்​டுப்​பாட்​டில் உள்ள ரகைன் மாகாணம், மிராக்​-யூ நகரில் உள்ள பொது மருத்​து​வ​மனையை குறி​வைத்து மியான்​மர் ராணுவத்​தின் போர் விமானம் புதன்​கிழமை இரவு குண்​டு​களை வீசி​யது. இதில் மருத்​து​வ​மனை தரைமட்​ட​மானது. 34 நோயாளி​கள், மருத்​துவ ஊழியர்​கள் உயி​ரிழந்​தனர். 80-க்​கும் மேற்​பட்​டோர் படு​கா​யம் அடைந்​தனர்.


இதுகுறித்து மியான்​மர் அரசி​யல் நோக்​கர்​கள் கூறும்​போது, “இந்த நகரை மீண்​டும் தங்​கள் கட்​டுப்​பாட்​டின் கீழ் கொண்டு வர மியான்​மர் ராணுவம் அதிதீ​விர முயற்​சிகளை மேற்​கொண்டு வரு​கிறது. மியான்​மர் ராணுவ வீரர்​களால் தரைவழி​யாக முன்​னேற முடிய​வில்​லை. இதன்​காரண​மாக மிராக் யூ நகர் மீது அடிக்​கடி வான்​வழி தாக்​குதல் நடத்​தப்​படு​கிறது’’ என்று தெரி​வித்​தனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%