திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த பெரும்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கான திருக்குறள் முற்றோதல் மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியர் கோ.ஸ்ரீதர் தலைமை தாங்கினார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் முதல்வர் பா.சீனிவாசன், வழக்கறிஞர் சா.இரா.மணி, கலாம் பவுண்டேஷன் நிர்வாகி சீ.கேசவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக, திருவண்ணாமலை திருக்குறள் தொண்டு மைய நிறுவனர் பாவலர் ப.குப்பன் பங்கேற்று, திருக்குறளின் சாரம்சங்களையும், குறளே நமது வாழ்வின் அடிப்படை செயல்பாடுகளுக்கு வழிகாட்டியாக அமைந்துள்ளது என்று விளக்கினார். மேலும் திருவள்ளுவர் வேடமிட்டு திருக்குறளை ஒப்பித்த மாணவர்களுக்கு புத்தக பரிசுகள் வழங்கப்பட்டது. இறுதியில் பள்ளி ஆசிரியை பா.ரேவதி நன்றி கூறினார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?