மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: அரசுப் பள்ளி ஆசிரியர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
Jul 27 2025
88

ஊட்டி:
நீலகிரி மாவட்டம் காத்தாடிமட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்த செந்தில்குமார் (50), பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கடந்த 3-ம் தேதி மாணவிகள் புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து குழந்தைகள் நலன் பாதுகாப்புக் குழும உறுப்பினர் கொடுத்த புகாரின் பேரில், ஊட்டி ஊரக அனைத்து மகளிர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, செந்தில்குமாரை கைது செய்தனர். இந்நிலையில், செந்தில்குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யுமாறு நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா, மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரைத்தார்.
இதன்பேரில், மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா, குண்டர் தடுப்பு சட்டத்தில் செந்தில்குமாரை அடைக்குமாறு நேற்று உத்தரவிட்டார். குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைப்பதற்கான ஆணையின் நகல் செந்தில்குமாருக்கு வழங்கப்பட்டு, அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?