மாதவிடாய் சுகாதார மேலாண்மை குறித்த விழிப்புணர்வு பயிற்சி
Oct 30 2025
14
இராமநாதபுரம் , அக் 30: இராமநாபுரம் மாவட்டம் கடலாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 30.10.2025, திங்கள்கிழமை தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் மாதவிடாய் சுகாதார மேலாண்மை குறித்த விழிப்புணர்வு பயிற்சி மாணவிகளுக்கு அளிக்கப்பட்டது.
இந்த பயிற்சி வகுப்பிற்கு வட்டார ஒருங்கிணைப்பாளர் திரு அருள் தாஸ், வட்டார வள பயிற்றுனர்கள் திருமதி பாண்டியம்மாள் மற்றும் திருமதி விஜயலெட்சுமி ஆகியோர் மாணவியர்களுக்கு மாதவிடாய் குறித்த தவறான கருத்துக்களை போக்கும் வண்ணம் தெளிவான
கருத்துக்கள், மனநலம் சார்ந்த விழிப்புணர்வு கருத்துக்கள் மற்றும் பயிற்சியினையும் வழங்கினர்.
இந்நிகழ்சியை பள்ளி தலைமை ஆசிரியர் திரு நாகராஜன் அவர்கள் தலைமை தாங்கி துவங்கி வைத்தார். இறுதியில் பள்ளி நாட்டு நலபணித்திட்ட அலுவலர் திரு சொக்கர் அவர்கள் நன்றியுரையாற்றினார்.
இந்நிகழ்வில் அனைத்து மாணவியர்கள் மற்றும் பெண் ஆசிரியர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?