20 வயதிற்குப்பட்ட 51ஆவது தேசிய ஜூனியர் மகளிர் கபடி போட்டி டிசம்பர் 25ஆம் தேதி மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடை பெறுகிறது. கொல்கத்தா டம் டம் சிறைச்சாலை அருகே உள்ள, உள்ளரங்கு மைதானத்தில் 28ஆம் தேதி வரை இந்த தொடர் நடைபெற உள்ளது. இந்நிலையில், தேசிய ஜூனியர் கபடி தொட ருக்கான தமிழ்நாடு மகளிர் அணியின் பயிற்சி முகாம் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் வெள்ளியன்று தொடங்கியது. டிசம்பர் 23ஆம் தேதி நடைபெறும் இந்த பயிற்சி முகாமில் தமிழ்நாடு அணியின் நட்சத்திர வீராங்கனை “கண்ணகி நகர்” கார்த்திகா உள்ளிட்ட வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். பயிற்சி முகாமில் தேசிய ஜூனியர் மகளிர் கபடி தொடரில் பங்கேற்கும் வீராங்கனைகள் மற்றும் கேப்டன் பதவிக்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நட்சத்திர வீராங்கனை “கணணகி நகர்” கார்த்திகா தமிழ்நாடு கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்பு அதிகம் இருப்ப தாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆந்திராவில் ஆடவர் கபடி தொடர் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள உள்ளரங்கு மைதானத்தில் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 15 முதல் 18ஆம் தேதி 51ஆவது தேசிய ஜூனியர் ஆடவர் கபடி போட்டி நடைபெற உள்ளது. 20 வயதிற்குட்பட்டோர் பங்கேற்கும் இந்த தொடரில் 75 கிலோ எடை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?