மாப்பிள்ளைக்கு பட்டுவேட்டி பெண்ணுக்கு பட்டுசேலை தருவோம் காஞ்சிபுரத்தில் பழனிசாமி வாக்குறுதி

மாப்பிள்ளைக்கு பட்டுவேட்டி  பெண்ணுக்கு பட்டுசேலை தருவோம்  காஞ்சிபுரத்தில் பழனிசாமி வாக்குறுதி


காஞ்சிபுரம்,ஆக. 22-

அதிமுக ஆட்சிக்கு வந்தால் மணமகளுக்கு பட்டுப் புடவையும், மணமகனுக்கு பட்டு வேட்டியும் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று பழனிசாமி கூறினார்.

காஞ்சிபுரம் குமரக்கோட்டம் பகுதியில் நேற்று நடந்த பிரசார கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிச்சாமி பேசியது:

 இப்போதெல்லாமல் சினிமாவில் நடித்துவிட்டு ஓய்வு பெறும் வயதில் கட்சி ஆரம்பிக்கின்றனர். அதிமுகவில் இருப்பவர்கள் உழைப்பால் முன்னேறியவர்கள். நான் 50 ஆண்டுகால அரசியல் மூலம் படிப்படியாக உயர்ந்துதான் இந்த நிலைக்கு வந்துள்ளேன். அதிமுகவில் மட்டுமே உழைப்பும் விசுவாசமும் இருந்தால் உயர முடியும்.

 புதிய கட்சி தொடங்குபவர்கள் கூட அதிமுக தலைவர்களைத்தான் உதாரணமாக கூறுகின்றனர். அந்த அளவுக்கு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தியவர்கள் நமது தலைவர்கள்.

  கடந்த ஆண்டில் 17 அரசு மருத்துவக் கல்லூரிகளை தொடங்கியது அதிமுகதான். அதேபோல் 67 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை தொடங்கினோம். விவசாயத்துக்கும், நெசவாளர்களுக்கும் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினோம். குடிமராமத்து திட்டம் மூலம் நீர் நிலைகள் பாதுகாக்கப்பட்டன. நெசவாளர்களுக்கு பல்வேறு மானிய உதவிகள் வழங்கப்பட்டன. அதிமுக வந்தால் வழங்கப்பட்ட நலத்திட்டங்கள் தொடரும். மாணவர்களுக்கு நிறுத்தப்பட்ட மடிக்கணினி வழங்கப்படும். அதிமுக ஆட்சியில் மக்கள் மன நிறைவு பெறும் வகையில் பல லட்சம் மதிப்பில் கான்கீரீட் வீடுகள் கட்டித் தர நடவடிக்கை எடுக்கப்படும். திருமண உதவித் திட்டம், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும். மணமகளுக்கு பட்டுப் புடவையும், மணமகனுக்கு பட்டு வேட்டியும் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

இவ்வாறு பழனிசாமி கூறினார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%