மாமல்லபுரத்தில் 4வது ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டி : வெற்றி பெற்ற வீரர் – வீராங்கனைகளுக்கு பதக்கம் வழங்கினார் உதயநிதி

மாமல்லபுரத்தில் 4வது ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டி : வெற்றி பெற்ற வீரர் – வீராங்கனைகளுக்கு பதக்கம் வழங்கினார் உதயநிதி

சென்னை, ஆக 13–


இந்தியாவிலேயே தமிழ்நாடு அதிக அலைச்சறுக்கு சாம்பியன்களை உருவாக்கியுள்ளது என்று -உதயநிதிஸ்டாலின் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.


துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாமல்லபுரத்தில் கடந்த 3–ந் தேதி முதல் 12–ந் தேதி வரை தமிழ்நாடு அரசின் நிதியுதவியுடன் நடத்தப்பட்ட 4–வது ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் 2025 போட்டியில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு பதக்கங்களை வழங்கினார்.


இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:–


இந்த ஆண்டு சாம்பியன்ஷிப் போட்டியை நடத்துவதற்காக முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசு 3 கோடியே 30 லட்சம் ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளது. இந்திய அலைச்சறுச்கு வரலாற்றில் முதல் முறையாக, இந்திய அலைச்சறுக்கு வீரர் ரமேஷ் புதிஹால் ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்றுள்ளார். இந்த சாதனை தமிழ்நாட்டின் கடற்கரையில் நடந்ததில் நாங்கள் பெருமையடைகின்றோம். ஆண்கள் ஓபன் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற ரமேஷ் புதிஹாலுக்கு பாராட்டுகள்.


இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்கள் ஓபன் அணி தரவரிசையில் இந்தோனேசியா மற்றும் தென் கொரியாவுக்கு அடுத்ததாக இந்தியா ஒட்டுமொத்தமாக 3வது இடத்தைப் பிடித்தது.


கோவளத்தைச் சேர்ந்த தமிழ்நாட்டின் வீரர் கிஷோர் அரையிறுதிக்கு முன்னேறி யாரும் நினைத்துப் பார்க்க இயலாத சாதனையைப் படைத்துள்ளார். அதே நேரத்தில் கோவளத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் காலிறுதிக்கு முன்னேறினார். 18 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில், கோவளத்தைச் சேர்ந்த 13 வயது ஹரிஷ் காலிறுதிக்கு முன்னேறி, அவரது வயதினருக்கு மீறிய சாதனையை படைத்துள்ளார்.


19 நாடுகள்


112 வீரர்கள்


இந்தியாவின் சாதனைளைத் தாண்டி ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டியில் பல்வேறு ஆசிய வீரர்களின் உலகத்தரம் வாய்ந்த திறமைகளை காண முடிந்தது. 17 வயதே நிரம்பிய கொரியாவின் கன்னாவ் ஹீஜெய், ஆண்கள் ஓபன் மற்றும் 18 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் பதக்கம் வென்று இரட்டை மகுடம் சூடியுள்ளார். மகளிர் ஓபன் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற ஜப்பானை சேர்ந்த அன்ரி மட்ஸுனோ-வுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


19 நாடுகளைச் சேர்ந்த 112 அலைச்சறுக்கு வீரர்கள், 25 நடுவர்கள் உட்பட 60 அலுவலர்கள்பங்கேற்புடன் இந்த ஆண்டிற்கான போட்டிகள் சிறப்பாக முடிந்துள்ளது. அதிகளவிலான வீரர்களின் பங்கேற்பும், அவர்கள் வெளிப்படுத்திய உற்சாகமூட்டும் அலைச்சறுக்கு செயல்பாடுகளும் தமிழ்நாட்டில் சர்பிங் விளையாட்டை மேம்படுத்தும் எங்கள் முயற்சி சரியான பாதையில் செல்கிறது என்ற நம்பிக்கையை வழங்கியுள்ளது.


இவ்வாறு துணை முதலமைச்சர் தெரிவித்தார்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%