மாரி ஒரு சிறிய டீக்கடை வைத்திருந்தான். அதில் வரும் சொற்ப வருமானத்தில் அவனும் அவன் மனைவி, ஒரு பிள்ளை ஒரு பெண் குழந்தையுடன் குடும்பம் போய்க் கொண்டு இருந்தது.
பையனை பக்கத்திலுள்ள சிறிய அரசுப் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தான்.
பையனும் ஒரளவு நன்கு படித்து வந்தான். டீக்கடை வருமானமும் ஒரளவு வந்தது, அவன் மனைவியும் சிறிய அளவில் துணிகளைத் தைத்துக் கொடுத்தும் சிறிய அளவில் தின்பண்டங்கள் செய்து விற்றும் வந்ததால் குடும்பம் அதிக கஷ்டமில்வாமல் போய்க் கொண்டிருந்தது.
பெண்ணும் பள்ளிச் செல்லத் தொடங்கியவுடன் அரசுப் பள்ளியிலேயே சேர்த்து படிக்க வைத்தான். அவளும் ஒரளவு நன்கு படித்தாள்.
பையன் ஒன்பதாவது வகுப்பு வந்தவுடன் பள்ளிக்கு சற்று தூரம் போய் படிக்க வேண்டிய நிலை.
அருகில் உள்ள பள்ளியில் கட்டணம் கட்டி மட்டுமே படிக்க வைக்க முடியும்.
என்ன செய்வது என்று யோசித்து ஒரு சிறிய சைக்கிள் வாங்கிக் கொடுத்து அவனை அனுப்பினான்.
இப்படியே போனால் பையனின் படிப்பு மேலே தொடர முடியாத நிலை வரும் என்று நினைத்து கடையை சிறிது விரிவாக்கம் செய்ய முடிவு செய்தான்.
கையில் இருந்த சிறிய சேமிப்பு,மனைவியின் சிறிய நகைகள் எல்லாம் விற்று கொஞ்சம் பெரிய கடையைத் தொடங்கினான்.
தனி ஒருவனாக வேலை செய்ய முடியாமல் ராஜா என்ற பையனை வேலை செய்ய வைத்துக் கொண்டான்.
நல்ல பையன், கணக்கு வழக்கு என்று நாலு விஷயங்கள் தெரிந்தவன். விசுவாசமாக இருந்தான்.
கடையும் நன்கு வளர்ந்தது. அயராத
உழைப்பு .
பையனும் காலேஜ் படிப்புக்கு வந்தான். பணம் கட்டுவது மிகக் கஷ்டம் நீ ஏதாவது வேலைக்குப் போ என்று மாரி கூறினான்.
அவன் மறுத்தான். மேலும் படிக்க ஆசை என்று வாதிட்டான்.
தம்பி,தங்கை போல் இருந்த முதலாளி மகனுக்காக ராஜா வாதிட்டு கல்லூரியில் சேர்த்தான்.
முன்பு இருந்ததை விட ராஜா மேல் அவர்களுக்கு மிகுந்த மரியாதை வந்தது.
ராஜாவிற்கு என்றுமே முதலாளி குடும்பத்தின் மீது ஒரு பாசம் மரியாதை இருந்தது.
அவனும் தன் உழைப்பு முழுவதையும் கொட்டினான்.
மாரியும் நல்ல இடத்தில் வரன் பார்த்து எளிய முறையில் ஆனால் அழகாக ராஜாவிற்கு திருமணம் செய்து வைத்து எல்லாரும் நல்ல முதலாளி எனப் புகழும் படி நடத்தி வைத்தார்.

ஹேமா வாசுதேவன்
சென்னை
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?