முதல்முறையாக எம்எல்எஸ் கோப்பை வென்றது இன்டர் மியாமி..!

முதல்முறையாக எம்எல்எஸ் கோப்பை வென்றது இன்டர் மியாமி..!


 

மெஸ்ஸி தலைமையிலான இன்டர் மியாமி அணி தனது ஏழு ஆண்டுகளில் முதல்முறையாக எம்எல்எஸ் கோப்பையை வென்று வரலாறு படைத்துள்ளது.


தாமஸ் முல்லர் தான் மீண்டும் மெஸ்ஸியை வீழ்த்துவதாகக் கூறியிருந்த நிலையில், அவரது அணி படுதோல்வி அடைந்தது.


புளோரிடாவின் தென்கிழக்கு கடற்கரையில் உள்ள ஃபோர்ட் லாடர்டேல் சேஸ் ஸ்டேடியத்தில் எம்எல்எஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இன்டர் மியாமி அணியும் வான்காவெர் அணியும் மோதின.


இந்தப் போட்டியில் இன்டர் மியாமி அணி 3-1 என வென்றது. இந்தப் போட்டியில் லியோனல் மெஸ்ஸி 2 அசிஸ்ட்டுகளைச் செய்து அசத்தினார்.


ஜெர்மனி அணிக்கு தலைமை தாங்கிய தாமஸ் முல்லர் 2014 உலகக் கோப்பை இறுதிப் போட்டி, 2010 உலகக் கோப்பை காலிறுதியில் மெஸ்ஸியின் ஆர்ஜென்டீனாவை தோற்கடித்தார்.


அதேபோல இந்தமுறையும் நடக்குமென அவர் பேட்டி அளித்திருந்த நிலையில், மெஸ்ஸி அதை தவிடுபொடியாக்கியுள்ளார்.

 

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%