முஹர்ரம் பண்டிகை குறித்த கட்டுரை

முஹர்ரம் பண்டிகை குறித்த கட்டுரை

இஸ்லாமிய மாதங்களில் ஆண்டின் முதல் மாதம் முஹர்ரம். பன்னிரெண்டு மாதங்களில் புனிதமான நான்கு மாதங்களாக போற்றப்படுவது, துல்க‌அதா, துல்ஹிஜ்ஷா, முஹர்ரம் மற்றும் ரஜப் ஆகும். (புகாரி: 3025) இவற்றில் சிறந்த மாதம் முஹர்ரம். இந்த நான்கு மாதங்களில் போர் புரிவது தடைசெய்யப்பட்டுள்ளது.


    அபூதர் (ரழியல்லாஹு அன்ஹு) அறிவிக்கிறார்கள்: "நான் நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்களிடம் இரவின் எந்தப் பகுதி சிறந்தது? இன்னும் மாதங்களில் எது சிறந்தது" எனக் கேட்டேன். நபி (ஸல்) கூறினார்கள்: "இரவில் சிறந்தது அதன் நடுப்பகுதி. மாதங்களில் மிகச் சிறந்தது நீங்கள் முஹர்ரம் என்று அழைக்கின்ற அல்லாஹ் வுடைய மாதமாகும்." (நசாயி: 4612)


   முஹர்ரம் அல்லாஹ்வுடைய மாதம் என்று சொல்லப்பட்டதிலிருந்து அதன் சிறப்பும் மேன்மையும் கூடுதலானது என்பதை அறியலாம்.


முஹர்ரம் முதல் தினம் அல் ஹிஜ்ரி ஆகவும் அதாவது ஹிஜ்ராவை நினைவு கூறும் முகமது நபி (ஸல்) மக்காவை விட்டு மதீனாவுக்கு சென்றது. பத்தாவது தினம் ஆஷுராவாகவும் பின்பற்றப்படுகிறது. முஹர்ரம் ஒன்பது பத்து ஆகிய நாட்களில் நோன்பு நோற்பது முஸ்லிம்கள் அந்நாளை அனுஷ்டிக்கும் முறையாகும்.  


நபி (ஸல்) அவர்களின் பேரன் இமாம் ஹுசைன் மற்றும் அவர்களின் தோழர்கள் கர்பலா யுத்தத்தில் 680 AD உண்மைக்கும், நீதிக்கும் போரிட்டு தியாகம் செய்து மாண்டதை நினைவு கூறும் தினமாக முஹர்ரம் கொண்டாடப்படுகிறது.


    நபி (ஸல்) அவர்களிடம் முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாள் (ஆஷுரா) பற்றி கேட்டதற்கு " இந்த நோன்பு கடந்த ஆண்டு 


(பாவத்திற்)கான பரிகாரமாகும்" என பதிலளித்தார்கள். "நோன்பு வைப்பதற்கு இன்ன நாள்தான் சிறப்பானது என்றில்லை ஆனால், ரமலான் மாதத்திற்கும் ஆஷுரா தினத்திற்கும் சிறப்பு உண்டு" என நபி 


(ஸல்)அவர்கள் அருளினார்கள். 


" முஹர்ரம் மாதம் ஒரு நாள் நோன்பு வைப்பவருக்கு 30 நாட்கள் நோன்பு வைத்த நன்மை கிடைக்கும்"எனவும் நபி (ஸல்)கூறினார்கள்.


   எகிப்தை ஆண்டு வந்த ஃபிர்அவுன் என்ற கொடுங்கோலன் இஸ்ரவேலர்களை அடிமைகளாக கொடுமைப்படுத்திக் கொண்டிருந்தான்.மேலும் தன்னைத்தானே கடவுள் என்றும் கூறிக்கொண்டு நாட்டு மக்களை சிரம் பணியுமாறு அடக்குமுறை செய்து கொண்டிருந்தான்.அவனுக்கு பாடம் புகட்ட, மக்களை நேரான பாதைக்கு அழைக்க இறைத்தூதர் மூஸா அவர்களை இறைவன் தேர்ந்தெடுத்து அவனிடம் சென்று சத்தியத்தை எடுத்துரைக்குமாறு கட்டளையிட்டான். மூசா ஃபிர்அவ்னிடம்


" அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர


( வேறெதுவும்) கூறாமலிருப்பது என் மீது கடமையாகும்; உங்களுடைய இறைவனிடமிருந்து உங்களுக்குத் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்திருக்கிறேன்- ஆகவே இஸ்ரவேலர்களை என்னிடம் அனுப்பி வை" என்று கூறினார். (குர்ஆன் : 7: 104, 105 )இருவருக்கும் இடையே நடைபெற்ற சம்பவங்கள் குரானில் அத்தியாயம் 7 வசனம் 103 முதல் 126 வரை கூறப்பட்டுள்ளது.எதற்கும் ஃபிர்அவ்ன் கட்டுப்படவில்லை. இதைத்தொடர்ந்து நடந்த சில சம்பவங்களுக்கு பிறகு இறைவன் மூஸா (அலை) அவர்களையும் அவரை பின்பற்றியவர்களையும் அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு பணித்தான். ஆனால் அவர்களை அழித்தொழிக்க ஆணவம் கொண்ட ஃபிர்அவுனும் அவனது படைகளும் பின் தொடர்ந்தார்கள். வழியில் செங்கடல் குறிக்கிட்டது, ஆனால் இறைவனின் மாபெரும் அற்புதத்தால் செங்கடல் பிளந்து அவர்களுக்கு வழி விட்டது. அவர்கள் கடலை கடந்த பின் அவர்களை துரத்திக்கொண்டு வந்த ஃபிர்அவுனும் அவனது படைகளும் கடலைக் கடக்கும் போது கடல் மீண்டும் இணைந்து மூழ்கடிக்கப்பட்டார்கள்.ஆகவே அவர்கள் நம் அத்தாட்சிகளைபொருட்படுத்தாமல், அவற்றைப் பொய்ப்பித்துக் கொண்டிருந்ததால் அவர்களைக் கடலில் மூழ்கடித்து அவர்களிடம் நாம் பலி வாங்கினோம் என்று அல்லாஹ் திருக்குர்ஆன் வசனம் 7:136 குறிப்பிடுகிறான். அவ்வாறு இறைத்தூதர் மூஸாவும் அவரை பின்பற்றியவர்களும் அற்புதமான முறையில் காப்பாற்றப்பட்ட நாள் தான் முகரம் பத்தாம் நாள்.



எஸ்.அப்துல் ரஷீத்.

தஞ்சாவூர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%