
பனை மரங்களில் தென்னை மரங்களில் இலை காம்பை மரத்துடன் இறுக்கமாக பற்றிக்கொள்ள பனைமரம், தென்னை ஆகிய மரங்கள் உருவாக்கும் நார் போன்ற அமைப்புக்கு பன்னாடை என்று பெயர். அந்த நார் அமைப்பு இலைகளை மரத்தோடு இருக்குமாக பிணைக்க உதவியது. முதிர்ச்சி அடைய, அடைய அந்த இலையும் அந்த நார் போன்ற அமைப்பும் கீழே தானாக உதிர்ந்து விழும். அக்காலத்தில் பனைமரம் கற்பக விருட்சமாகவும் தென்னைமரம் பொருளாதார மேம்பாடு மற்றும் மண்ணரிப்பு தடுப்பு போன்றவற்றையும் பார்த்து கொண்டது. கிராமங்களில் பனை மரத்திலிருந்து பதநீர் மற்றும் கள் இறக்கும் தொழில் மக்கள் செய்து வந்தனர். பனை மரத்தில் இருந்து வடியும் பதனீ மற்றும் கள்ளை சேகரிக்க சிறிய மண் பானையை அதன் மஞ்சரி காம்பில் மாட்டி வைத்திருப்பார்கள்.சேகரமான வடிநீரில் தேனீக்கள், ஈக்கள், தூசுகள், கொசுக்கள், ஆகியவை விழுந்து கிடக்கும் அவற்றை வடிகட்ட மரத்தில் இருந்த பஞ்சு போன்ற பன்னாடையை புனல் போன்று செய்து அதை வடிகட்டி வாடிக்கையாளர்களுக்கு கொடுத்தார்கள். நாளடைவில் அந்த புனல் போன்ற அமைப்பில் தேவையில்லாத பொருட்கள் இருப்பதைக் கண்டு தேவையானதை விட்டுவிட்டு தேவையில்லாததை பிடித்து வைத்திருக்கும் இந்த பஞ்சு போன்ற பன்னாடையை வைத்து மற்றவர்களை திட்டுவதற்கு "பன்னாடை" என்ற வார்த்தையை பயன்படுத்தினர் அதாவது ஒருவர் நல்லதை விட்டு விட்டு கெட்டதை செய்வதை பார்த்தவர் பன்னாடையோடு ஒப்பிட்டு திட்டுவார் அல்லது தான் சொன்ன நல்ல விஷயங்களை செவியில் வாங்கிக் கொள்ளாமல் கெட்ட விஷயங்களை மட்டும் வாங்கிக் கொள்கின்றவர்களை பன்னாடை என்று திட்டுவார்கள். பன்னாடை என்பது அத் தாவரத்திற்கும் அத்தொழிலாளிக்கும் நல்லதை செய்தாலும் அதை இப்போது கெட்ட பொருளில் மட்டுமே பயன்படுத்துகிறோம். இதற்குத்தான் வள்ளுவர் எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்று அறிகுறித்தினார்.
மு குமார்
திருப்போரூர்
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?