*01.11.2025 சனிக்கிழமை மொடக்குறிச்சி ஒன்றியம் குளூர் ஊராட்சி கிராம சபை கூட்டம் செங்கரைப்பாளையத்தில் அங்கன்வாடி வளாகம் அருகே ஈரோடு மாவட்ட ஆட்சியர் அவர்கள் கலந்து கொண்ட கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கஸ்பாபேட்டை உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் 401 நபர்கள் செங்கரைப்பாளையம் பகுதி நேர நூலகத்தில் 417 முதல் 818 வரை உள்ள உறுப்பினராக சேர பூர்த்தி செய்த 401 விண்ணப்ப படிவங்களை பள்ளி தலைமை ஆசிரியை திருமதி சண்முகவடிவு அவர்கள் ஈரோடு மாவட்ட ஆட்சியர் திரு ச.கந்தசாமி ஐஏஎஸ் அவர்கள் மூலம் பகுதி நேர நூலகர் திரு S.கிருஷ்ணன் அவர்கள் வசம் வழங்கப்பட்டன.*
*தலா ரூ20- வீதம் 401 உறுப்பினர்கள் கட்டணத் தொகை ரூ8020- கஸ்பாபேட்டை பள்ளி ஆசிரியப் பெருமக்கள் மற்றும் தோட்டக்காட்டு நல்லப்ப கவுண்டர் அறக்கட்டளை ஆகியோரால் செலுத்தப்பட்டது.*
*பெண்கள், ஆண்கள், அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் என பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்*
*🙏நன்றி! வணக்கம்!🙏*
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?