வானின்று பொழிந்து வற்றாது வளம் தரும்
மழை நீருக்கா?
உடல் தாங்கி
உயிர் காக்கும்
பூமிக்கா?
உயிர்வளியாய் உரு மாறி
உற்சாகமாய் ஊடுருவும்
காற்றுக்கா?
மேற்கூரையாகித்
தாங்கும் ஆகாயத்திற்கா?
விளைந்த நெல்லை
உணவாக்கி
உடல் வளர்க்கும்
நெருப்புக்கா?
பாரெல்லாம் பாதுகாக்கும்
பஞ்சபூதம் அரனாகி
பக்குவமாய் நமைக்காக்கும்
இயற்கைக்கா?
ஈரைந்து மாதம்
கருவறையில் உடல் வளர்க்கும் அன்னைக்கா?
நாளெல்லாம் நமைத் தாங்கும் தந்தைக்கா?
ஏட்டுப் படிப்பை எழுத வைக்கும் ஆசிரியருக்கா?
உடனிருக்கும் உறவுக்கா?
சூழ்ந்திருக்கும் சுற்றத்திற்கா?
மனதின் வலி புரியாது
நாவைச் சுழற்றி
சொற்களை ஆயுதமாக்கி
மறையா வடுவாக்கும்
சுயநலம் மிக்க
மனிதருக்குச் சொல்ல வேண்டும் நன்றி
நம்மை நாம் உணர
அனுபவப் பாடம் தரும்
அருகதை இல்லா
மானுடரால்
கற்கும் பாடம் ஏராளம்
அனுபவம் தரும் மனிதராலே
ஆயிரம் பாடம் வாழ் நாளில்
நாளெல்லாம் நன்றி சொல்வோம்
நல்ல பாடம் தந்தமைக்கு.
*************************************

தமிழ்நிலா
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?