கனவுகளற்ற உறக்கத்தில்
இமைகளற்ற விழிகளாய்...
தேகமற்ற உருவத்தில்
வேர்களற்ற விருட்சமாய்...
நிபந்தனையற்ற வாழ்க்கையில் உண்மையற்ற பொய்களாய்...
உதிரமற்ற உயிரினத்தின்
இறப்பில்லா ஓட்டமாய்...
ஒப்பனையற்ற யதார்த்தத்தில்
நகலான பிம்பங்களாய்...
மதுவற்ற மயக்கத்தில்
காதலின் போதையாய்....
தினவற்ற திசுக்களுக்குள்
கலவரங்கள் துரோகமாய்...
பனிக்கட்டிக்குள் நெருப்பினை புதைத்தாள் மௌனமாய்...
பிரிதொரு உயிர்தனைப்
பிரியமாய்க் கொஞ்சியவள்...
உதிரத் துடிப்பும் நாடியசைவும் இழந்தவனை மறந்தாளே!
சுமையோடு நகரும்
உயிர்ப்பலி ஆனேனே!
வாதையோடு மரணிக்கிறேன்
காதல் போதையோடு அல்ல!
~~~~~~~~~~~~~
முகில் தினகரன்,
கோயமுத்தூர்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%