வலி...

வலி...



கடந்துபோகும் கவிதைகளில்

வாசமில்லை..


நிகழும் சம்பவங்களில்

மனம் ஒட்டவில்லை..


இரவின் நெடுநேரம்

உறக்கமில்லை..


விழியின் பெருவெள்ளம்

தீரவில்லை..


நடுநசிக்கப்பால் 

விடியலுமில்லை..


தவறிய உறக்கங்களில்

உன் கனவுமில்லை..


இருப்பதும் இறப்பதும்

வேறில்லை..


நீயின்றி..


உயிர்ப்பதும் வாழ்வதும்

அர்த்தமில்லை..!


ம.முத்துக்குமார்

வே.காளியாபுரம்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%