ரஷியா - உக்ரைன் விவகாரத்தை தீர்ப்பது கடினமாக உள்ளது: டிரம்ப் ஒப்புதல்

ரஷியா - உக்ரைன் விவகாரத்தை தீர்ப்பது கடினமாக உள்ளது: டிரம்ப் ஒப்புதல்

வாஷிங்டன்,


நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போர், மூன்று ஆண்டுகளைக் கடந்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


இதற்கிடையே, அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள ட்ரம்ப், இவ்விரு நாடுகளிடையே நடைபெற்று வரும் போரை நிறுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், டொனால்ட் ட்ரம்பும் விளாடிமிர் புதினும் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும், அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அதைத் தொடர்ந்து ட்ரம்புடன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தை நடத்தினார். ”ஆனால், போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரையில், எதுவும் சொல்ல முடியாது” என்று அமெரிக்க அதிபர் கூறியுள்ளார்.


இந்நிலையில், உலகில் 7 போர்களை நிறுத்திய எனக்கு, ரஷ்யா-உக்ரைன் விவகாரத்தை தீர்ப்பது கடினமாக உள்ளது என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி உள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறி இருப்பதாவது; புதினும், ஜெலன்ஸ்கியும் இணைந்து செயல்படுவார்களா என்று நாங்கள் பார்த்து வருகிறோம். வெளிப்படையாக காரணங்களுக்காக அவர்கள் நன்றாக பழகுவது இல்லை.


இருவருடனும் நானும் இருக்க வேண்டுமா இல்லையா என்பது பின்னர் பார்ப்போம். இருவரும் சந்திக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால் அவர்கள் தொடர்ந்து சண்டையிடுகிறார்கள். நான் ஏழு போர்களை நிறுத்திவிட்டேன். இந்த போரையும் நிறுத்த விரும்புகிறேன். ஆனால் அது மிகவும் கடினமானதாக மாறி வருகிறது “என்றார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%