ராஜஸ்தானில் உள்ள மழலையர் பள்ளிகளில் சமஸ்கிருத மொழிப் பாடம் கட்டாயம்.!
Aug 16 2025
11

ராஜஸ்தானின் சமஸ்கிருத கல்வித்துறையின் கீழ் இந்த திட்டம் அடுத்த வருடத்தில் முழுமையாக செயல்படுத்தப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் : ராஜஸ்தான் மாநிலத்தில் மழலையர் பள்ளிகளில் (Pre-KG, LKG, UKG) சமஸ்கிருத மொழிப் பாடத்தை கட்டாயப் பாடமாக அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவுக்கு NCERT மற்றும் மாநில அரசு அளித்துள்ளதாகவும், அடுத்த கல்வியாண்டு முதல் இத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான திட்டம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமைச்சரவைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சமஸ்கிருத கல்வி ஆணையர் பிரியங்கா ஜோதாவத் தெரிவித்தார். பாடத்திட்டத்திற்கான கட்டமைப்பை நாங்கள் தயாரித்துள்ளோம், மேலும் புத்தகங்களையும் வெளியிட்டுள்ளோம். அமைச்சரவையின் இறுதி ஒப்புதல் கிடைத்தவுடன் வகுப்புகள் தொடங்கப்படும்.
இந்த முயற்சி, இந்தியாவின் பண்டைய மொழியான சமஸ்கிருதத்தையும் அதன் கலாச்சார பாரம்பரியத்தையும் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இருப்பினும், இந்த முடிவு சில சர்ச்சைகளையும் எதிர்ப்புகளையும் எழுப்பியுள்ளது.
குறிப்பாக, ராஜஸ்தானில் மும்மொழிக் கொள்கையின் கீழ் உருது மொழி கற்பிக்கப்பட்டு வந்த பள்ளிகளில், அதற்கு பதிலாக சமஸ்கிருதம் திணிக்கப்பட்டதாக ஆசிரியர்கள் மற்றும் சில தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதற்கு பதிலளிக்கும் விதமாக, ராஜஸ்தான் கல்வி அமைச்சர் மதன் தில்வார், உருது மொழி பாடத்தை நீக்கவில்லை என்றும், ஹிந்திக்கு முக்கியத்துவம் அளிப்பதே தங்கள் நோக்கம் என்றும் விளக்கமளித்துள்ளார்.
இந்த முடிவு குறித்து கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளது. சிலர் இதை இந்திய கலாச்சாரத்தை மேம்படுத்தும் முயற்சியாக வரவேற்க, மற்றவர்கள் இது மொழி திணிப்பு மற்றும் உருது மொழி ஆசிரியர்களின் வேலைவாய்ப்புக்கு பாதிப்பு என விமர்சிக்கின்றனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?