ரூ.35,400 சம்பளத்தில் தமிழக அரசு மருத்துவமனைகளில் லேப் டெக்னீசியன் பணி
Jul 29 2025
14

தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது பற்றிய விபரம் வருமாறு:
அறிவிப்பு எண்: 11/MRB/2025
பணி: Lab Technician (Grade-III)
காலியிடங்கள்: 60
சம்பளம்: மாதம் ரூ.35,400 - ரூ 1, 30,400
தகுதி: +2 தேர்ச்சியுடன் ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் பாடத்தில் குறைந்தபட்சம் 2 ஆண்டு டிஎம்எல்டி படிப்பை முடித்திருக்க வேண்டும். நல்ல ஆரோக்கியமான உடற்தகுதியை பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 1.7.2025 தேதியின்படி 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். பொதுப் பிரிவினர்களில் மாற்றுத்திறனாளிகள் 42-க்குள்ளும், முன்னாள் ராணுவத்தினர் 48- க்குள்ளும் இருக்க வேண்டும். பொதுப் பிரிவினரைத் தவிர இதரப் பிரிவினர்களுக்கு உச்ச வயது வரம்பு கிடையாது.
தேர்வு செய்யப்படும் முறை: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.600, எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர் ரூ.300 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.mrb.tn.gov.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 30.7.2025
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?