நேற்றைய நிலவரப்படி அவருடைய சொத்து மதிப்பு 638 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.
வாஷிங்டன்,
உலகின் பெரும் பணக்காரரும், பிரபல தொழில் அதிபருமானவர் எலான் மஸ்க். ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா, எக்ஸ் வலைத்தளம், எக்ஸ் ஏ.ஐ., ஸ்டாா்லிங்க் உள்ளிட்ட பிரபல உலக நிறுவனங்களின் நிறுவனராகவும், தலைவராகவும் இருந்து வருகிறார். மேலும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன் நெருங்கி பழகி வரும் எலான் மஸ்க் அவருக்கான சிறப்பு ஆலோசகரும், டாட்ஜ் என்ற திறன் மதிப்பீட்டுத்துறையின் முன்னாள் தலைவராகவும் செயல்பட்டு வந்தார்.
இந்தநிலையில் எலான் மஸ்க் உலகில் 600 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்பை தாண்டிய முதல் தனிநபராக நேற்று உருவெடுத்தார். நேற்றைய நிலவரப்படி அவருடைய சொத்து மதிப்பு 638 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.58 லட்சம் கோடி ஆகும். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அமெரிக்க பங்குச்சந்தையில் அதிக மதிப்புடன் பட்டியலிடப்பட்டு உள்ளதால் அவருடைய சொத்து மதிப்பு தாறுமாறாக உயர்ந்தது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?