ரெப்போ வட்டியைக் குறைத்த ரிசர்வ் வங்கி..

ரெப்போ வட்டியைக் குறைத்த ரிசர்வ் வங்கி..



டிசம்பர் 3, 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடைபெற்ற நாணயக் கொள்கைக் கூட்டத்தில் நாட்டின் பொருளாதார நிலை மற்றும் எதிர்கால கணிப்புகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்த வட்டி விகித குறைப்பின் மூலம் ரெப்போ விகிதம் 5.5 சதவீதத்தில் இருந்து 5.25 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், நிலையான வைப்பு வசதி (SDF) விகிதம் 5 சதவீதமாகவும், ஓரிரு நாள் கடன் வசதி (MSF) விகிதம் மற்றும் வங்கி விகிதம் 5.5 சதவீதமாகவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி தனது நாணயக் கொள்கை நிலைப்பாட்டை 'நடுநிலை' (neutral) என்றே வைத்துள்ளது.


 ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா, பணவீக்கம் மற்றும் வளர்ச்சி குறித்த புதிய தரவுகளை ஆய்வு செய்த பிறகு, குழு ஒருமனதாக இந்த வட்டி விகித குறைப்புக்கு வாக்களித்ததாகத் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “மாறிவரும் மேக்ரோ பொருளாதார நிலைமைகள் மற்றும் எதிர்கால கணிப்புகள் குறித்த விரிவான மதிப்பீட்டிற்குப் பிறகு கொள்கை ரெப்போ விகிதத்தை உடனடியாக 25 அடிப்படை புள்ளிகள் குறைத்து 5.25 சதவீதமாக மாற்ற ஒருமனதாக வாக்களிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

வட்டி விகித குறைப்புக்கான காரணத்தை விளக்கிய கவர்னர் மல்ஹோத்ரா, பணவீக்கக் கணிப்பு கணிசமாக மேம்பட்டுள்ளதாகக் கூறினார். அவர் மேலும் கூறுகையில், “முந்தைய கணிப்புகளை விட பணவீக்கம் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம், அசாதாரணமான சாதகமான விலைகள் ஆகும்” என்றார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%