ரெயில்களில் பாதுகாப்பான பயணம்: மக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம்

ரெயில்களில் பாதுகாப்பான பயணம்: மக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம்


சென்னை, அக். 18–


தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு 'பாதுகாப்பான மற்றும் அசம்பாவிதமில்லாத பயணம்' குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் தெற்கு ரயில்வே சென்னை கோட்ட பாதுகாப்புத் துறை சார்பில் நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, ரயில்வே பாதுகாப்புப் படையினர் மோப்ப நாய்களின் உதவியுடன் புறநகர் முனைய நடைமேடைகளில் தீவிர சோதனைகளை நடத்தினர். சோதனையின்போது, பட்டாசுகளை எடுத்துச் சென்ற பயணி ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டு, ரயில்வே பாதுகாப்புப் படையினரால் அபராதம் விதிக்கப்பட்டார். மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், புறநகர் நிலையத்திற்குள் நுழையும் அனைத்து பயணிகளுக்கும் பொது அறிவிப்புகள் செய்யப்பட்டு, துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.


இந்நிகழ்ச்சியின் போது, முதுநிலை கோட்ட பாதுகாப்புஅதிகாரி ஆர். சத்தியசீலன், நிலைய இயக்குநர் மஞ்சுநாதன், பாதுகாப்பு ஆலோசகர் சுப்பிரமணியன் மற்றும் பாதுகாப்புத் துறையின் பிற ஊழியர்கள் உடனிருந்தனர்.


பயணிகளுக்கான பாதுகாப்பு


* ரயில்களிலோ அல்லது ரயில் நிலைய வளாகத்திற்குள்ளோ பட்டாசுகள் அல்லது வேறு ஏதேனும் எளிதில் தீப்பற்றக்கூடிய அல்லது வெடிக்கும் பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டாம்.


* இத்தகைய பொருட்களை எடுத்துச் செல்வது சக பயணிகளுக்கும் ரயில்வே சொத்துக்களுக்கும் கடுமையான ஆபத்துகளை ஏற்படுத்துகிறது.


* எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்வது தண்டனைக்குரிய குற்றமாகும்.


* எளிதில் தீப்பற்றக்கூடிய மற்றும் வெடிக்கும் பொருட்களைக் கொண்டு பயணம் செய்வது அல்லது வைத்திருப்பது கண்டறியப்பட்டால், ரயில்வே சட்டம் 1989-இன் பிரிவுகள் 67, 164, மற்றும் 165-இன் கீழ், ரூ. 1000 வரை அபராதம் அல்லது 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.


அனைவரும் பாதுகாப்பான, பத்திரமான மற்றும் மகிழ்ச்சியான பண்டிகைப் பயணத்தை உறுதிசெய்ய, பாதுகாப்பு வழிகாட்டுதல்களைக் கண்டிப்பாகப் பின்பற்றி ரயில்வேயுடன் கைகோர்க்குமாறு சென்னை கோட்டம் அனைத்து பயணிகளையும் கேட்டுக்கொள்ளப்பட்டது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%