சிவசக்தி
நாப்பிராம்பட்டி
ஊத்தங்கரை
கிருஷ்ணகிரி மாவட்டம்
🌹லட்சுமியின் வடிவங்களாக அஷ்ட லட்சுமி எனும் எட்டு வடிவங்களும்,16 வடிவங்களும் சமய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
*அஷ்ட லட்சுமிகள்*
செல்வத்தின் அதிபதியாக வணங்கப்படும் லட்சுமியின் வடிவமானது ஆதிலட்சுமி,
தான்யலட்சுமி,
தைரியலட்சுமி,
கஜலட்சுமி,
சந்தானலட்சுமி, விஜயலட்சுமி, வித்யாலட்சுமி,
தனலட்சுமி என எட்டு வடிவங்களாக காணப்படுகிறது.
*16 வடிவங்கள்*
🍃தனலட்சுமி,
🍃வித்யாலட்சுமி,
🍃தான்யலட்சுமி,
🍃வரலட்சுமி,
🍃சவுபாக்யலட்சுமி,
🍃சந்தானலட்சுமி,
🍃காருண்யலட்சுமி,
🍃மகாலட்சுமி,
🍃சக்திலட்சுமி,
🍃சாந்திலட்சுமி,
🍃சாயாலட்சுமி,
🍃த்ருஷ்ணாலட்சுமி,
🍃சாந்தலட்சுமி,
🍃கிருத்திலட்சுமி,
🍃விஜயலட்சுமி,
🍃ஆரோக்கிய லட்சுமி என லட்சுமிகள் 16 வகை வடிவங்களாக காணப்பட்டது.
*ஆதிலட்சுமி*
மகாலட்சுமி,பிருகு முனிவரின் மகளாக அவதரித்தவள். திருமகளின் மிகப்பழைமையான தோற்றம்.இந்த லட்சுமியை ரமா லட்சுமி என்றும் அழைக்கின்றார்கள். தாமரை,வெண்கொடி,அஞ்சல்,அருளல் தாங்கும் நாற்கரங்கள் கொண்ட அன்னை.
*தனலட்சுமி*
பொன்,பணம் என்பவற்றை அருளும் அன்னை.சக்கரம், சங்கு,கலசம், வில்லம்பு,தாமரை,அஞ்சேல் என்பவற்றைத் தாங்கும் ஆறுகரம் கொண்டவள்.
*தானியலட்சுமி*
வேளாண்மை வளம் பெருக்கும் தேவி.பசுந்துகில் தரித்து,நெற்கதிர்,கரும்பு,வாழை, தாமரைகள்,கதை,அஞ்சேல்,அருளல் தரித்த எண்கரம் கொண்டருளும் தாயார்.
*கஜலட்சுமி*
கால் நடைகள் மூலம் வளம் அருள்பவள்.இவளே அரசராக்கும் பெருஞ் செல்வங்கள் தருபவள்.பாற்கடலிலிருந்து உதித்தவளும் இவளே!
இருயானைகள் நீராட்ட,அஞ்சேல், அருளல்,தாமரைகள் தாங்கியவளாக செந்துகில் உடுத்து அருளுவாள்.
*சந்தான லட்சுமி*
குழந்தைப் பேறு அருளும் திருமகள்.கலசங்கள்,கத்தி,கேடயம்,அஞ்சேல் தரித்த அறுகரத்தவள்.மடியில் குழந்தையொன்று அமர்ந்திருக்க அருள்புரிவாள்.
*வீரலட்சுமி*
வீரம்,வலிமை, அருளுவாள்.துன்பகரமான தருணங்களில் வாழ்க்கையில் துணிவைத் தரும் தாயார்.செவ்வாடை தரித்தவள்.சங்கு,சக்கர,வில்,அம்பு,கத்தி,ஓலைச்சுவடி,அஞ்சேல்,அருளல் என்பவற்றைத் தாங்கிய எண்கரத்தினள்.
*விஜயலட்சுமி*
யுத்தங்களில் மாத்திரமன்றி,எடுத்த காரியங்கள் எல்லாம் வெற்றி பெற அருளுவாள்.சங்கு,சக்கரம்,பாசம், கத்தி,கேடயம், தாமரை,அஞ்சேல்,அருளல் என எட்டுக்கரங்களுடன் காட்சியளிப்பவள்.
*வித்யாலட்சுமி*
அறிவையும் கலைகளில் வல்லமயும் தருபவள்.வெண்துகிலுடுத்து,அஞ்சேல்,அபயம்,தாமரைகள் ஏந்திய நாற்கரத்தினள்.
======================
வேறு சில வடிவங்கள்
☆செழிப்பை நல்கும் வளத்திரு ஐசுவரியலட்சுமி.
☆நன்மைகள் யாவும் தரும் நற்றிரு சௌபாக்கியலட்சுமி.
☆அரசபோகங்களை அருளும் நகர்த்திரு ராஜியலட்சுமி,மற்றும் வரம் தரும் வரலட்சுமி.