வடசென்னை அனல் மின் நிலைய 3-ம் அலகில் செப்டம்பரில் முழுதிறனில் மின் உற்பத்தி: மின் வாரியம்

வடசென்னை அனல் மின் நிலைய 3-ம் அலகில் செப்டம்பரில் முழுதிறனில் மின் உற்பத்தி: மின் வாரியம்

சென்னை:

வடசென்னை அனல் மின் நிலைய 3-ம் அலகில் செப்​டம்​பரில் முழு​திறனில் மின் உற்​பத்தி செய்​யப்​படும் என மின் வாரிய அதி​காரி​கள் தெரி​வித்​தனர். ரூ.10,158 கோடி மதிப்​பில் கட்​டப்​பட்ட வடசென்னை அனல் மின்​நிலை​யத்​தின் 3-வது அலகு, கடந்த ஆண்டு மார்ச் மாதம் திறக்​கப்​பட்​டது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்​தில்​தான் சோதனை ஓட்​டம் நடத்​தப்​பட்டு மின் உற்​பத்தி தொடங்​கப்​பட்​டது.


800 மெகா​வாட் திறன் கொண்ட 3-வது அலகில் தற்​போது சோதனை ஓட்​ட​மாக 620 மெகா​வாட் மட்​டுமே உற்​பத்தி இருக்​கிறது. மேலும், அவ்​வப்​போது தொழில்​நுட்ப கோளாறு ஏற்​பட்டு மின் உற்​பத்தி நிறுத்​தப்​பட்டு வந்த நிலை​யில் தற்​போது நிலை​யான உற்​பத்தி மேற்​கொள்​ளப்​படு​வ​தாக மின் வாரிய அதி​காரி​கள் தெரிவிக்​கின்​றனர்.


இருப்​பினும் வணிக ரீதி​யான உற்​பத்தி இன்​னும் தொடங்​கப்​பட​வில்​லை. வணிகரீதி​யான உற்​பத்தி என்​றால் மின் நிலை​யத்தை முழு​திறனில் 72 மணி நேரம் தொடர்ந்து இயக்க வேண்​டும். இதை பூர்த்தி செய்​தால்​தான் உற்​பத்​தி​யாகும் மின்​சா​ரத்தை விற்க முடியும். இந்​நிலை​யில். அடுத்த மாதம் முதல் முழு திறனில் மின் உற்​பத்தி செய்​யப்​படும் என மின் வாரிய அதி​காரி​கள் தெரி​வித்துள்​ளனர்.


இதுகுறித்து மின் வாரிய அதி​காரி​கள் கூறிய​தாவது: சீரமைப்பு பணிகள் வட சென்னை அனல் மின் நிலைய 3-வது அலகில் இருந்த குறை​களை சரி செய்ய நடவடிக்கை எடுக்​கப்​பட்​டது. பெரும்​பாலான குறை​கள் சரி செய்​யப்​பட்​டுள்​ளன. போர்க்​கால அடிப்​படையில் சீரமைப்​புப் பணி​கள் மேற்​கொள்​ளப்​படு​கின்றன.


மேலும், தேவைக்​கேற்ப பணி​யாளர் நியமனம் செய்​யப்​பட்​டுள்​ள​தால் செப்​டம்​பர் முதல் வாரத்​தில் 3-வது அலகு முழு திறனில் வணிக ரீதி​யில் செயல்பட தொடங்​கும்​. இவ்​வாறு அவர்​கள்​ கூறினர்​.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%