" அவள் மேனி
பனியை விட
வழவழப்பானது .... "
மயிலிறகு கூட
கனமாக இருக்கும்
அவள் பொன்
மேனி மிருதுவானது ..."
பூ போல் அவள்
மேனி தொட்டால்
உதிர்ந்து விடுவாள் ..."
சந்தனம் போல்
அவள் மேனி
உரசினால் மணம்
தருவாள் ....."
மழைத்துளி
போன்றது அவள்
மேனி நெருங்கினால்
மண்வாசனை
தருவாள் ..."
நெருப்பை
போன்றது அவள்
மேனி அனுமதி
இல்லாமல்
நெருங்கி விட்டால்
அனலை கக்கிடுவாள் ..."
நிழலைப் போன்றது
அவள் மேனி
நெருங்கினால்
மறைந்திடுவாள் ....."
கவிதை போன்றது
அவள் மேனி
வாசிக்க வாசிக்க
பொருள் தருவாள் .... "
நிலவைப் போன்றது
அவள் மேனி
கவிஞர்கள்
என்றும் விடுவதாக
இல்லை அவளை ..."
- சீர்காழி .ஆர். சீதாராமன்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?