- மக்களில் கணிசமானோர் செரிமானப் பிரச்சனைகளால் பாதிக்கப்படுகின்றனர். மக்கள் தொகையில் சுமார் 70 விழுக்காட்டினர் பேர் அமிலத்தன்மை, வயிறு உப்புசம், மலச்சிக்கல் அல்லது செரிமானக் கோளாறுகளை எதிர்கொள்கின்றனர். ஆனால் குறைவான நபர்களே மருத்துவ உதவியை நாடுகின்றனர். மாறிவரும் உணவுப் பழக்கவழக்கங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகமாக உட்கொள்ளுதல், முறையற்ற உணவு நேரங்கள், நாள்பட்ட மன அழுத்தம், உடல் உழைப்பற்ற வாழ்க்கை முறை மற்றும் போதுமான தூக்கமின்மை ஆகியவை இந்த கோளாறுகளுக்கு வழிவகுக்கின்றன. இளைஞர்கள் மற்றும் வளரிளம் பருவத்தினரிடையே குடல் அழற்சி நோய் மற்றும் குடல் செயல்பாட்டில் கோளாறுகள் அதிகரித்து வருகின்றன என்று வடபழனி காவேரி மருத்துவமனையின் இரைப்பைகுடலியல் முதுநிலை நிபுணர் டாக்டர் பாண்டுரங்கன் பாசுமணி கூறினார். கவலை தரும் இந்தப் போக்குகளுக்குத் தீர்வுகாணும் வகையில்,செரிமான மண்டல அறிவியல் மையம் தொடங்கப்பட்டுள்ளதாக மருத்துவமனையின் செயல் இயக்குநர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் கூறினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?