வரலாற்றில் மிக அதிகமாக நாமக்கல்லில் முட்டை விலை 625 பைசாவாக உயர்வு!

வரலாற்றில் மிக அதிகமாக நாமக்கல்லில் முட்டை விலை 625 பைசாவாக உயர்வு!


 


கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு காரணமாக நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை அதிகரித்து வருவதாக தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க செயலாளர் சுந்தரராஜூ தெரிவித்தார்.


நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 8 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இதன்மூலம் நாள்தோறும் 7 கோடி முட்டைகள் உற்பத்தி ஆகிறது. அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் முட்டைகள் தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கு அனுப்பப்படுகிறது.


இதேபோல் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், விற்பனைக்காக நாள்தோறும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. தவிர, நாமக்கல்லில் இருந்து நாள்தோறும் வெளிநாடுகளுக்கும் முட்டை ஏற்றுமதி செய்யப்படுகிறது.


இதனிடையே நாமக்கல் மண்டலத்தில் உற்பத்தி செய்யப்படும் முட்டைகளுக்கு தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (என்இசிசி) என்ற தனியார் அமைப்பு விலை நிர்ணயம் செய்கிறது. அந்த விலையை கோழிப்பண்ணையாளர்களும் கடைப்பிடித்து வருகின்றனர்.


இதன்படி கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 590 பைசா என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இதுவே நாமக்கல் மண்டல முட்டை வரலாற்றில் அதிகபட்ச விலையாக இருந்தது. இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக முட்டை விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.


இதன்படி நாமக்கல் மண்டல முட்டை வரலாற்றில் அதிகபட்ச விலையாக ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 625 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நெருங்கி வரும் கிறிஸ்துமஸ் பண்டிகை, புத்தாண்டு பிறப்பு மற்றும் கடுங்குளிர் காரணமாக முட்டை விலை அதிகரித்து வருவதாக கோழிப்பண்ணைாளர்கள் தெரிவிக்கின்றனர்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%