வலங்கைமானில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சிபிஐ, சிபிஎம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

வலங்கைமானில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சிபிஐ, சிபிஎம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.



திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சிபிஐ, சிபிஎம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. டிட்வா புயலாலும், மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை இணைய செயலின் மூலம் கணக்கெடுப்பதை கைவிடவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 35 ஆயிரம் இழப்பீடு வழங்கிடவும், வடகிழக்கு பருவமழையால் அறுவடை செய்ய முடியாமல் அழுகி சேதம் அடைந்துள்ளது கணக்கெடுத்து நிலுவையில் உள்ளவைக்கு இழப்பீடு உடன் வழங்கவும் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சிபிஐ சின்னராசா, சிபிஎம் கே.சுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் பி.கந்தசாமி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் எஸ். எம். செந்தில் குமார், சிபிஎம் ஒன்றிய செயலாளர் இளங்கோவன், எஸ்.உதயகுமார், சிபிஐ ஒன்றிய துணை செயலாளர் கே.செல்வராஜ், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் ஜி.ரவி, சிபிஐ ஒன்றிய பொருளாளர் மருதையன், விவசாய சங்க ஒன்றிய பொருளாளர் எஸ்.பூசாந்திரம், ஒன்றிய துணை செயலாளர் எஸ்.மதியழகன், ஒன்றிய துணைத் தலைவர் எம்.ராஜேஷ்கண்ணா, ஜஒய்ஃப் ஒன்றிய தலைவர் தங்க லெனின் மற்றும் ஒரு பெண் விவசாயி உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%