வலங்கைமான் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற மறைமுக ஏலத்தில் அதிகபட்சமாக பருத்தி குவிண்டால் ரூ.8 ஆயிரத்துக்கு ஏலம்
Aug 10 2025
93

வலங்கைமான் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற மறைமுக ஏலத்தில் அதிகபட்சமாக பருத்தி குவிண்டால் ரூ.8 ஆயிரத்துக்கு ஏலம் போனது. விவசாயிகள் மகிழ்ச்சி.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் வலங்கைமான் - நீடாமங்கலம் சாலையில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் உள்ள வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் வாரந்தோறும் புதன்கிழமைகளில் தேசிய வேளாண் மின்னணு சந்தை மூலம் நடைபெறுகிறது. இந்த வாரம் ஒழுங்குமுறை விற்பனை கூட செயலாளர் கண்ணன் உத்திரவின் பேரில் பருத்தி மறைமுக ஏலம் நடைபெற்றது. பருத்தி ஏலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பருத்தியினை கொண்டு வந்திருந்தனர். சேலம், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பகுதி வியாபாரிகள் கலந்து கொண்டனர். பருத்தி அதிகபட்ச விலையாக குவிண்டால் ரூ.8 ஆயிரத்து 009 க்கும், குறைந்த பட்சமாக ரூ.7 ஆயிரத்து 525 க்கும், சராசரி விலையாக குவிண்டால் ரூ.7 ஆயிரத்து 720 க்கும் ஏலம் போனது. பருத்தி மறைமுக ஏலத்தில் 484.77 குவிண்டால் பருத்தி ரூ. 37 லட்சத்து 56 ஆயிரத்து 349 க்கு ஏலம் போனது. ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெறும் பருத்தி ஏலத்தில் விவசாயிகள் தங்களது பருத்தியினை நன்கு உலர்த்தி கொண்டு வந்து ஏலத்தில் கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது. சரியான எடை மற்றும் நல்ல விலையில் பருத்தியினை இடைத்தரகர்கள் இன்றி விற்பனை செய்து பயன் பெற ஒழுங்குமுறை விற்பனை கூட மேற்பார்வையாளர் ரமேஷ் விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?