வளர்ப்பு

வளர்ப்பு



இளைஞர்களை சவால்களைச் சந்திக்கும்

வல்லமை பெற்றவர்களாக உருவாக்குவீர்


ஜாக்கிசான் சொத்துக்களைத் தானமிட 

மூலம் வாரிசு சுயமாய் வென்று காட்டிட


அனுபவித்த வேதனைகளைப் பிள்ளைகள்

எதிர்கொள்ளக் கூடாதென்பது மதியீனம்


முட்டி மோதி ரணமுடன் நெஞ்சு நிமிர்த்த

பழக்கி ஆளாக்கி பக்குவப் படுத்திடுவீர்


இரு பிள்ளைகள் போதுமென தீர்மானித்த

பெற்றோரால் இதையும் செய்திட இயலும்


உங்கள் வளர்ப்பு பிறரால் போற்றப்படும்

பரவலாய் மெச்சும் தாரக மந்திரமாகும்



-பி. பழனி,

சென்னை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%