வாசகர் கடிதம் (உஷா முத்துராமன் ) 28.07.25

வாசகர் கடிதம் (உஷா முத்துராமன் ) 28.07.25


அன்புடையீர்,


வணக்கம். 28.7.25 அன்றைய தமிழ்நாடு இ பேப்பர்.காம் முதல் பக்கத்தில் நம் பாரத பிரதமரின் படத்துடன் ராஜராஜசோழன் ராஜேந்திர சோழனுக்கு தமிழகத்தில் பிரம்மாண்ட சிலைகள் என்ற செய்தியையும் படித்து மிகவும் மகிழ்ந்தேன். இன்றைய பஞ்சாங்கம் மிக நல்ல நாளாக அமைய எனக்கு உதவியது மனம் நிறைந்த பாராட்டுக்கள்.


திருக்குறளை அதன் பொருளுடன் படிக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பாராட்டுக்கள் வீதி உலா சென்ற உற்சவர் அகிலாண்டேஸ்வரி அம்மன் என்ற திருவானைக்காவலில் வீதி உலா சென்ற அந்த பாடத்துடன் பார்த்ததும் அந்த திருவானைக்காவலுக்கு என் மனம் சென்று விட்டது .


நலம் தரும் மருத்துவம் பகுதியில் வந்த உப்பு அதிகம் எடுப்பது தப்பு என்ற சிலேடையுடன் சொல்லப்பட்ட வாசகமும் எப்படி உப்பை குறைத்து சாப்பிடலாம் என்றும் சொன்னது மிகவும் அருமையான தகவல். மனம் நிறைந்த பாராட்டுக்கள் ஆடிப்பூரத் திருவிழா திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் தேரோட்டம் என்ற செய்தி மிகவும் நல்ல தகவல் பாராட்டுக்கள்.


தெரு நாய்களை கருணை கொலை செய்ய தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது மிகவும் வருத்தமான செய்தி. ஒரு உயிரை கொல்வது பாவமல்லவா என்று மனம் வேதனை அடைந்தது.


தினம் ஒரு தலைவர்கள் பகுதியில் இன்று கோபிநாத் பரதலை அவர்களின் வரலாறு மிகவும் அருமை புதுமையான தகவலாக ஆர்வமுடன் படிக்க வைத்தது.


பல்சுவை களஞ்சியம் பகுதி நல்ல அருமையான செய்திகளை கொடுப்பதால் ஆர்வமுடன் முதலில் அதை படிக்கத் தோன்றும்.


பன்முகம் பக்கத்தில் வந்த அனைத்து தகவல்களும் மிகவும் அருமை. தலையில் பூச்சி வெட்டு புது வெட்டு ஏற்பட காரணம் தெரியுமா என்று அழகான தகவலை சொன்னது பயனுள்ளது பாராட்டுக்கள்.


பதினாறாம் பக்கத்து அனைத்து செய்திகளும் மிகவும் அருமை. உலக சாதனையில் முயற்சியாக சிலம்பம் சுற்றும் நிகழ்ச்சி மிகவும் அருமை. வெற்றி பெற இறைவனை பிரார்த்திக்கிறேன். பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு பார்க்கும்போது மழை பொழிந்து நாடு சுபிட்சமாக உள்ளது என்று ஆர்வமாக படிக்க வைத்தது.


சுற்றுலா பக்கத்தில் வந்த கொடைக்கானலுக்கு அருகில் பார்த்த சிறந்த இடங்கள் என்று பகுதி இரண்டாக வெளியிட்டது மிகவும் அருமை. பயனுள்ள தகவல்களை அழகாக கொடுப்பதில் உங்களுக்கு நிகர் நீங்களே தான் மனமார்ந்த பாராட்டுக்கள்.


கர்நாடகாவில் கட்டுமான பணி செய்பவர்களின் குழந்தைகளுக்காக அவர்கள் சாப்பிடவும் உறங்குவதற்கும் பள்ளிகள் தொடங்கியது மிகவும் அருமையான தகவல் இதனால் அந்த குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பார்கள்.   


வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி ஆதார் ஆவணத்தை தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு கொடுத்தது மிகவும் அருமை . இதனால் நல்ல நிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்பு உள்ளது வெறும் 50 ஆயுதங்களில் பாகிஸ்தான் பணிந்தது என்று விமானப் படைத்தலை தளபதி தகவல் சொன்னது நல்ல தகவல் பாராட்டுக்கள் .


ஆஸ்திரேலியாவில் இந்தியர் மீது கொடூர தாக்குதல் அதிர்ச்சி சம்பவம் என்று ஆஸ்திரேலியாவில் நடந்ததை படித்ததும் அதிர்ச்சியாக இருந்தது. உலக கோடீஸ்வரர்கள் பட்டியில் இடம் பிடித்த சுந்தர் பிச்சை என்று நம் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த சுந்தர் பிச்சை அவர்களைப் பற்றி படித்ததும் மனதார பாராட்ட தோன்றியது.


தித்திக்கும் திங்கள்கிழமை திகட்டாத செய்திகளுடன் எங்களுக்கு அழகாக தொகுத்து கொடுத்த தமிழ்நாடு இ பேப்பரான் ஆசிரியர் குழுமத்திற்கு மனமார்ந்த பாராட்டுக்கள் 


நன்றி 

உஷா முத்துராமன்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%