இன்றைய தமிழ்நாடு இ பேப்பரில் நலம் தரும் மருத்துவ பகுதியில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ரத்தத்தில் சர்க்கரையை நிர்வகிப்பது மிகவும் முக்கியமான ஒன்று என்பதை சொல்லி அதற்கான வழிமுறைகளையும் தெளிவாக சொல்லி இருந்தது சர்க்கரை நோயாளிகளுக்கு பயனுள்ள தகவலாக இருக்கும். சிவ .முத்து லட்சுமணன் அவர்கள் எழுதி வருகின்ற திருவிளையாடல் புராணத்தில் "வெள்ளியம்பல திருக்கூத்தாடிய படலம்" சிவனின் திருவிளையாடலை மிக அழகாக சொல்லி இருந்தது. இந்தப் படலம் ஆனது ஆடலும் பாடலுமாக நமது வாழ்க்கையை ஆனந்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற கருத்தை வலியுறுத்தி இருந்ததுசிறப்பு. முருகப்பெருமானின் கந்தசஷ்டி நிறைவு நாளான என்று சூரசம்கார நிகழ்வு ஒட்டி கந்த சஷ்டி கவசம் அரங்கேறிய சென்னிமலை ஆலயத்தைப் பற்றிய தகவலை வெளியிட்டு சிறப்பு சேர்த்து இருந்த விதம் பாராட்டுக்குரியது. இன்றைய நாளிதழில் பல் செவி களஞ்சியம் பகுதியில் தெரிந்து கொள்வோம் என்கிற பகுதியிலே அவ்வையாரை பற்றி தெரியாத ஒரு தகவலை தெரிய வைத்ததற்காக ஆசிரியர் குழுவிற்கு நன்றியை தெரிவித்துக் கொள்ளலாம். பன்முகம் பகுதியில் ஆரஞ்சு பழத்தை விட ஆரஞ்சு பழ தோலில் எவ்வளவு சொத்துக்கள் இருக்கிறது இவற்றிற்கெல்லாம் உதவுகிறது என்பதை பற்றி படித்த போது ஆச்சரியமாக இருந்தது. நாள்தோறும் நல்ல தகவல்களை ஒன்று திரட்டி ஒவ்வொரு நாளும் புதிய தகவல்களை எல்லாம் தமிழ்நாடு இ பேப்பரில் வழங்கி வரும் ஆசிரியர் குழுவிற்கு எனது உளங்கனிந்து பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

கவி-வெண்ணிலவன்
மணமேல்குடி
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?