
தரமான நம்பர் 1 நாளிதழான தமிழ்நாடு இ. பேப்பர் இந்த 733 நாட்களில் முப்பது லட்சம் வாசக நட்புகளுடன் தனது மூன்றாம் ஆண்டு பயணத்தை வெற்றிகரமாக தொடர்வது என்னை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்துகிறது. இந்த ஈடு இணையற்ற நாளிதழ் இப்படியே அற்புதத்திலும் அற்புதமாக தொடர்ந்து பற்பல ஆண்டுகள் சிறப்புடன் வெளிவந்து வெள்ளிவிழா, பொன்விழா, பவழவிழாவெல்லாம் கொண்டாட வேண்டுமென்று வாழ்த்துகிறேன்.
'கர்ணனும் கஞ்சனும்' என்ற பாளை.கணபதியின் சிறுகதை சிறப்பாக இருந்தது. ஐம்பது ரூபாயை பிச்சைக்காரருக்கு தானம் செய்துவிட்டால் வேலை கிடைத்துவிடுமா? இந்த திடீர் தான தர்மமும் போலி பக்தியும் கடவுளிடம் பலிக்காது என்பது பரதனுக்கு புரியாதது ஆச்சரியம்தான். நேற்று கர்ணன் பிறந்ததும், இன்று கஞ்சன் பிறந்ததும் பரதனின் அதே மனதில்தான் என்பது உண்மைதான்!
ஹரணியின் 'விதை விதைத்தால்....' என்ற சிறுகதை நல்லதொரு கதையாக திகழ்கிறது. அந்த ஏழை வாசுகியின் மாறிய மனம் பாராட்டுக்குரிய ஒரு அற்புதமாகும். இந்த உலகத்தில் யாருமே தப்பானவர்கள் இல்லை. தப்பானவர்கள் என்று சொல்லுவோரிடமும் ஏதோ ஒரு நல்வினை இருக்கத்தான் செய்கிறது. அதை நினைத்தால் எதுவும் தப்பாகப் போகாது என்ற தமிழ்ச் செல்வனின் எண்ணம் மிகச் சரியானது.
ப.கோபிபச்சமுத்துவின் 'கோயில் பிரசாதங்களும் அவற்றின் விசேஷ அம்சங்களும்' என்ற கட்டுரை ஏராளமான சுவையான தகவல்களுடன் சிறப்பாக இருந்தது. பிரசாதங்களை சுவாமி மீது நம்பிக்கையோடு சாப்பிட வேண்டும். அவ்வாறு சாப்பிடும்போதுதான் நமக்கு அதன் முழு பலனும் கிடைக்கும். பிரசாதம் என்பது சுவாமிக்கு நைவேத்தியம் செய்ததிலிருந்து நமக்கு விநியோகம் செய்வதாகும். இதில் சுவாமியின் பலன் இருக்கிறது என்பது உண்மை. சுவாமி பிரசாதங்களை சுவாமியே நமக்குத் தருவதாக ஐதீகம் என்ற கருத்து சிறப்பானது.
'திருநெல்வேலி அல்வா' என்ற கவிதையை அதுவும் திருநெல்வேலிக்காரரே எழுதியிருப்பது மிகப்பொருத்தமாக இருந்தது. திருநெல்வேலி அல்வாவின் பெருமையை ருசியை அப்படியே கவிதையிலும் கொண்டுவந்த கவிஞர் தி.வள்ளியை பாராட்டுகிறேன்.
பல்சுவை களஞ்சியத்தில் 'பாட்டி பேரன் அலப்பறைகள்' அட்டகாசம். எப்படியோ அந்த பொல்லாத பேரன் பாட்டியிடம் அப்படி இப்படியென்று ஏடாக்கூடமாக கொசுவைப் பற்றி கேள்விமேல் கேள்வி கேட்டு, கடைசியில் தாத்தாவை பிரச்சனையில் மாட்டிவிட்டு விட்டதை நினைத்தால் ஐயோ பாவமென்று இருக்கிறது!
சின்னஞ்சிறுகோபு,
சிகாகோ.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?