
நல.ஞானபண்டிதனின் 'சிலிண்டர்' சிறுகதையில் அந்த ஏழைப்பெண் பேசியது எல்லாம் நியாயமானது. ஆனாலும் இந்த சிறுகதை ஏழைச்சொல் அம்பலம் ஏறாது என்பதை உணர்த்துகிறது!
'கடைசில இப்படி ஆயிடுச்சே!' என்ற சிறுகதையை படித்தேன். என்ன கடைசில இப்படி ஆயிடுச்சேயென்று திடுக்கிட்டுப் போனேன். இதை நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை!
ரமா ஸ்ரீனிவாசனின் பயணங்கள் முடிவதில்லை பகுதிக்கான 'சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ' என்ற கட்டுரை ஒரு ஆன்மிக பரவசத்தை ஏற்படுத்தியது. ஸ்ரீவில்லிப்புத்தூர் தலத்தைப் பற்றியும், அதன் புராண வரலாறு பற்றியும் மிகவும் ஈடுபாட்டுடன் எழுதப்பட்ட இந்த கட்டுரை, இதயத்தைத் தொட்டது.
'ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாத்துவது ஏன்?' என்ற சிவசக்தியின் ஆன்மிக தகவல்கள் அற்புதம். வெற்றிலைக்கு அந்த பெயர் எப்படி வந்தது, ஆஞ்சநேய ஸ்வாமிக்கு வெற்றிலை மாலை அணிவிக்கும் பழக்கம் எப்படி உண்டானது என்பது போன்ற தகவல்கள் நான் இதற்கு முன் அறியாததாகும்.
சந்திரசேகர ஆசாத் என்ற பிரபலமான சுதந்திரப்போராட்ட வீரரை பற்றி தினம் ஒரு தகவல்கள் பகுதியில் படித்தபோது மெய்சிலிர்த்துப் போனேன். வீரம் செறிந்த தன்னலமில்லாத நாட்டுபற்று மிக்க அவரது வாழ்க்கை வரலாற்றை படிக்கும்போதே ஒரு பிரமிப்பு ஏற்படுகிறது.
வி.பிரபாவதி சர்க்கரை நோயால் வந்த சலிப்பை, வருத்தத்தை, ஏக்கத்தை அப்படியே சொல்லிவிட்டார். ஆனாலும் 'சர்க்கரை' என்ற அந்த கவிதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஏனென்றால் எனக்கு சர்க்கரை இல்லை! இந்த கவிஞருக்கும் இருக்காது என்று நம்புகிறேன்!
'அம்மி...ஆட்டுக்கல்...உரலெல்லாம் போய் மிக்சி, கிரைண்டர் வந்த காலமாற்றத்தை வே.கல்யாண்குமார் தெளிவாக சொல்லியிருக்கிறார். அரிய பெரிய பழைய காலம் பறந்து போனதே
அரைகுறையாய் உடை உடுத்தி நடந்து போனதே என்று அவர் நகைச்சுவை கலந்து சொன்ன உண்மை, மனதில் ஒரு சிந்தனை கீற்றை ஏற்படுத்தியது!
உமாதேவி சேகர் 'வயலோரம்' என்ற கவிதையில் தனது ஆசைகளையெல்லாம் சொல்லியிருந்தவிதம் ஒரு கிராமிய அழகை மனதிற்கு கொண்டுவந்தது. இந்த கவிதையை அவர் ஆசை ஆசையாக ரசித்து எழுதியிருக்கிறார்!
-சின்னஞ்சிறுகோபு,
சிகாகோ.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?