சிபி ராதாகிருஷ்ணன் ஒரு விவசாயி மகனாக இருந்து கொண்டு துணை ஜனாதிபதி பதவிக்கு உயர்ந்துளளார்
என மோடி புகழாரம். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கும்பகோணம் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. சென்னையில் ரியல் எஸ்டேட் ஊழியரை கடத்தி 40 லட்சம் பறிமுதல். நாளை திருவண்ணாமலை மகாதீபம் கொண்டாடப்படுகிறது.
கர்ப்பிணி பெண்கள் வேர்க்கடலை சாப்பிடலாமா என்ற கட்டுரை நல்ல பயனுள்ள தகவல். மைசூர் சுற்றுலா கட்டுரை பல அரிய தகவல்களை அறிய முடிந்தது. தஞ்சையில் 2000
ஏக்கர் பயிர்கள் சேதம். இனி வாட்ஸ் அப் பயன்படுத்த ஆக்டிவ் சிம் அவசியம் என அரசு உத்தரவு.
ஆதாரில் உள்ள செல்போனை
வீட்டிலிருந்தே மாற்றம் செய்யலாம்.
சபரிமலையில் 15 நாளில் 92 கோடி வசூல் ஆனது. வாக்காளர் திருத்த பணி பற்றி கேட்பது நாடகமல்ல என பிரியங்கா ஆதங்கம். திறமையான இந்தியர்களால் அமெரிக்கா பலனடைந்து உள்ளது என எலன் மாஸ்க் கருத்து தெரிவித்துள்ளார்.
சிறையில் இம்ரான் கான் உயிரோடு இருக்கிறார் என நம்பகமான தகவல்.
காதல் கவியரசு முத்து ஆனந்த் அவர்களின் காதல் கவிதைகள் தனி முத்திரை பதித்துள்ளன. காதல் வரிகள் ஒவ்வொன்றும் மணி மகுடம் பதித்தது போல் உள்ளது. தேனில் ஊறிய பலாச்சுவை போன்று
இனிப்பாக இருந்தது.
இன்றைய உலகச் செய்திகள் உள்ளூர் செய்திகள் ஆன்மீக செய்திகள் சிறுவர் மலர் ஆன்மீக மலர் சினிமா செய்திகள் கவிதைகள் கட்டுரைகள் பல சுவை செய்திகள் என அனைத்து அம்சங்களும் சிறப்பாக இருந்தது பாராட்டத்தக்கது.
தமிழ்நாடு இ பேப்பர் குடும்பத்திற்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

நடேஷ் கன்னா
கல்லிடைக்குறிச்சி
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?