தமிழ்நாடு இ இதழ் வாசக சொந்தங்களுக்கு வணக்கம். இன்றைய இதழ் குறித்து சில கருத்துக்கள்.
வீணையின் வகைகள் குறித்த தொகுப்பு பயனுள்ள தகவல்.
டிஜிட்டல் பேஸ் மேக்கர் குறித்த விரிவான செய்தி அனைவரும் டெக்னிகல் அறிவை அப்டேட் செய்து கொள்ளவேண்டிய பாடம். குழந்தைக்கு கூட இதைப் பொருத்திக்கொள்ளலாம் என்ற அம்சம் அறிவியல் அற்புதம். மனிதனின் சரீரத்தை மருத்துவ உலகம் ஒரு மிஷினாகவே பார்க்கிறது என்பது இதன் மூலம் அறிய முடிகிறது. இந்தக் கருத்து யுவல் நோவா ஹராரி எழுதிய Homo Deus என்ற நூலில் விவரிக்கப் பட்டுள்ளது.
டாப் டென் அமானுஷ்ய இடங்கள் த்ரில்லிங்கான வாசிப்பு அனுபவம். பெங்களூருவின் குறிப்பிட்ட செய்ன்ட். மார்க்ஸ் தெரு வழியே பலமுறை பயணம் செய்துள்ள எனக்கு வாஸ் வில்லா பற்றிய தகவல் ஆச்சரியமான செய்தி. கொல்கொத்தாவிலும் வாரன் ஹேஸ்டிங்ஸ் வாழ்ந்த பங்களாவில் இன்றும் அவர் நடமாட்டம் இருப்பதாக காவலாளிகள் கூறுகிறார்கள்.
திருஞான சம்பந்தரின் வரலாறு தெளிந்த தமிழில் தெரிந்த நிகழ்வு. திரு. சிவ. முத்து லட்சுமணன் அவர்களின் தமிழ் போச்சம்பள்ளிப் பட்டைப் போலவே, மென்மையாக, பதவிசாக உள்ளது. அவரின் தமிழுக்காகவே காலையில் இரு முறை மதியம் ஒரு முறை வாசித்தேன். அருமையான படைப்பு.
திரு. சீதாராமன் அவர்களின் சிறுகதை மருமகள் அல்ல மகள் அவருக்குள்ள கற்பனை ஆழத்துக்கு சற்று மேலோட்டம் தான். த்ரீ ஸ்டார்.
குமாரும், கிரிக்கெட்டும் சிறுகதை மீண்டும் பிரசுரிக்கப்பட்டுள்ளது. தினசரி சந்திக்கும் உருட்டுக்கள் சுவையானவை. அதுவும் ரிப்பீட் தான்.
நாளை சந்திப்போம். நன்றி.
பாளை. கணபதி.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?