வள்ளுவரை நினைக்கும் போதெல்லாம் ஆச்சரியம் வருகிறது.1330
குறள்கள் என்பது கூட
ஆச்சர்யம் தரவில்லை.
வாழ்வியல் நுணுக்கங்களை ஒண்ணே முக்கால் வரியில் சொல்லிய பாங்கு இருக்கிறதே...
அபாரம் அபாரம்...
எனக்கு எப்போதும் நினைவில் நின்று நெஞ்சம் இனிக்கச் செய்யும் குறளைப் பற்றி கொஞ்சம் விளக்குவதில் கூடுதல் விருப்பம். பொறுத்தருள்க.
பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்.
பொய் கூட வாய்மை தான்...எப்போது?
நன்மை பயக்கும் போது...
அது சரி நன்மை என்றால் யாருக்கு?
எப்படி?
அந்தப் பொய் குற்றம் இல்லாத நன்மையை
தருமானால் தாராளமாக பொய் சொல்லலாம் என்று அதிரடியாக நம்மைப் பார்த்து சொல்வதை
கொஞ்சம் நினைத்துப் பார்த்தால் வள்ளுவரை வான் புகழ் கொண்டவர் என்று நாம் புகழ்வது ஏனென்று தெரிந்து விடும்.
ஒவ்வொருவருக்கும் ஆண்டவன் தவறாமல் தந்த பொக்கிஷம் மனசாட்சி. இதில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது.
மனசாட்சி படி உன்னுடைய பொய் குற்றமில்லாத நன்மையை தருமென்று முடிவு பண்ணி விட்டால் குற்ற உணர்ச்சி எதுவும் இல்லாமல் தாராளமாக பொய் சொல்ல நமக்கு அனுமதி அளித்திருக்கும் வள்ளுவரை வானளவு புகழ்ந்தாலும் தகும்.
சிவ.முத்து லட்சுமணன்
எழுதிய ஆடி வெள்ளிக் கிழமை கட்டுரை அற்புதம் அற்புதம்.
ஆன்மிகத்தின் அடிப்படை யே அறிவியல் தான் என்பதை நிரூபிக்கும் வகையில் இருந்தது
மெச்சத்தக்கது.
முன்னாள் விகடன் ஆசிரியர் திரு.எஸ்.
பாலசுப்பிரமணியம் நினைவுகளில்,
ஜே.வி.நாதன் எழுதிய
சேவற்கொடியோன்
நூலுக்கு வெளியாகி இருந்த மதிப்புரை
சுருக்கமாகவும் சுவையாகவும் இருந்தது. திருச்சி
ஸ்ரீ காந்த்துக்கு வாழ்த்துக்கள்!
நலம் தரும் மருத்துவம் பகுதியில் வெளியாகி இருந்த சர்க்கரை நோயைக் கண்டு பயப்பட வேண்டாம் என்ற கட்டுரையை படித்து விட்டு அப்படியே என் தாயாரிடம் சமர்ப்பித்தேன்.
மிகவும் சந்தோஷப் பட்டார். பயனுள்ள தகவல்கள் என்று மனந்திறந்து பாராட்டி மகிழ்ந்ததைப் பார்த்து நானும் என் மனைவியும் மகிழ்ந்தோம்.
மறக்க முடியாத தருணம் அது.
இப்போதெல்லாம் எங்கள் வீட்டில் தமிழ் நாடு இ பேப்பர் தினசரி டாக் ஆஃப் தி
மேட்டர்.
முதல் பக்கத்தில் இந்தியா பாகிஸ்தான் போர் பற்றிய செய்திகள் சுவை குன்றாமல் விறுவிறுப்பு குறையாமல் பதிவாகி இருந்தது நல்ல பத்திரிகை என்பதை
ப்ரூஃப் பண்ணியது.
தினம் ஒரு தலைவர்கள் பகுதியில் கோவிந்த கிரி வரலாறு தெளிந்த நீரோடை போல் சொல்லப் பட்டிருந்தது.
சமூக மற்றும் சமய சீர்திருத்த வாதியின்
அனுபவங்கள் மிகவும் மதிக்கத்தக்கது.
போற்றத்தக்கது.
முகில் தினகரனின்
'இது தவறாத் தெரியல..'
கொஞ்சம் சிலிர்க்க வைத்தது.
வழக்கம் போல் முதலில் கவிதைகளை
யெல்லாம் வரி விடாமல் வாசித்து விட்டுத் தான் முதல் பக்கத்தில் இருந்து தொடங்கினேன்.
வண்ண வண்ணப் பக்கங்களின் வனப்பு
உள்ளத்தில் பெரும் மகிழ்ச்சியை அள்ளித் தருகிறது என்றால் மிகையில்லை.
தொடர்ந்து தொய்வின்றி இனிதாய் செயல் புரிந்து வரும் ஆசிரியர் குழுவினருக்கு திரும்பத் திரும்ப
நன்றியுடன் வாழ்த்துகள்!
இறுதியாக நீங்கள் யாரும் எதிர்பாராத ஒரு கேள்வி...
நமது தேசிய கீதத்துக்கு மொத்தம் எத்தனை வரிகள்?
யோசிக்காமல் சட்டென்று நீங்கள் சொல்லி விட்டால் நீங்கள் பாராட்டுக் குரியவர்.
நாளை சந்திப்போம்.
பி.சிவசங்கரன்
கோவை