வாசகர் கடிதம் (பி.சிவசங்கர்) 02.09.25

வாசகர் கடிதம் (பி.சிவசங்கர்) 02.09.25



தமிழ் நாடு இ பேப்பர் குழுமத்தின் சார்பாக வெளிவரும் அருள் தரும் தெய்வம் இதழுக்கு சந்தாதாரர் 

எண்ணிக்கையை 

அதிகரிக்கும் பணியை

வாசக உறவுகளே முன் வந்து ஆற்றினால் அதுஒரு புத்தம் புது முன்னுதாரணமாக 

இருக்கும் என்பதோடு 

மனித மாண்புக்கு எடுத்துக் காட்டாக விளங்கும் என்பதும் 

அசைக்க முடியாத உண்மை.


இதை நன்கு உணர்ந்து உள்ளன்போடு உறுதியாக செயல் படும் தென்காசி வாசக சொந்தம் வெங்கடாசலபதி அவர்களின் வாசகர் கடித்தை மூன்று முறை வாசித்து மகிழ்ந்தேன்.

ஒவ்வொரு தடவை

வாசிக்கும் போதும் 

புதுப் புது புரிதலும் 

புத்துணர்வும் எனக்கு கிடைத்தது.

இன்னும் சரியாக சொன்னால் அவரின் 

அன்பு மிகுந்த 

ஆழ்ந்த அக்கறை உணர்வு என்னை கூடுதலாகவே யோசிக்க வைத்தது.

பிறர் நலன் பேணுதல் என்னும் நுட்பமான 

 பண்பு தான் இங்கே கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய முக்கிய விஷயம்.

இந்த அறம் சார்ந்த 

விருப்பத்தில் பொதிந்துள்ள மேன்மையை --

மகத்துவத்தை தமிழ் நாடு இ பேப்பரின் வாசக சொந்தங்கள் உணர்ந்தாலே போதும். அதுவே நம் பயணத்தில் ஒரு மைல் கல். ஏனெனில் சர்வமும் எந்திரமயமாகிப் போன இந்த உலகில் 

மந்தை மனோபாவத்தில் மனிதம் கரைந்து காணாமல் போய் விடுமோ என்று அஞ்சி வாழும் இந்த காலத்தில், அர்ப்பணிப்பு உணர்வோடு நமக்கு அன்பையும் அறிவையும் தாராளமாக அள்ளி அள்ளி வழங்கி வரும் 

தமிழ் நாடு இ பேப்பரின் வளர்ச்சிக்கு 

யோசிக்கும் நல் உள்ளங்கள் இங்கே 

கூடி யிருப்பது எவ்வளவு பெரிய விஷயம்...

அன்பு நிறைந்த வாசக சொந்தங்களிடம் இந்த தருணத்தில் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்வதெல்லாம் இது தான்...


வாராது வந்த மாமணி போல் நமக்கு இறை சக்தியால் கிட்டி யிருக்கும் நல்லதொரு சத்சங்க சந்தர்ப்பத்தை 

நாம் எந்தச் சூழலிலும் மிஸ் பண்ணி விடக் கூடாது என்பது முக்கியம்... முக்கியம்.

நம் இதயங்களில் 

நல்ல நல்ல எண்ணங்களை மலர வைத்து வாழ்வை மணக்க வைக்கும் 

இந்த சத்சங்க தளத்தில் நின்று 

தொடர்ந்து பயணிக்கும் போது நினைத்துப் பார்க்க முடியாத நல் விளைவுகள் விளைச்சலாகக் கிடைக்கும் என்பது இறுதியிலும் உறுதி.


திரு.வெங்கடாசலபதி

கூறியது போல் சிலருக்கு இந்தப் பேருணர்வு சம்பந்தப்பட்ட கருத்தில் சிறிது தயக்கம் இருக்கலாம்.

தினசரி ஏனிந்த வியாக்கியானம் என்ற எரிச்சல் கூட எழலாம்.

இந்த மாதிரியான கருத்து உள்ளவர்களுக்காக சொல்கிறேன்.

 

வாசகர்கள் தாங்களாகவே முன்வந்து இணைந்து 

தாங்கள் வாசித்துப் பயன்பெறும் பத்திரிகையின் வளர்ச்சி குறித்து 

அக்கறை கொள்வதும் 

அடுக்கடுக்காக யோசிப்பதும் ஏதாவது செய்ய வேண்டும் என்று துடிப்பதும் 

உயர் உத்தமமான நற்பண்பு என்பதை தயவு செய்து நம்புங்கள். நல்லவராக வாழ்வதென்பது இங்கே பெரும் வரம் என்பதை சத்தம் போட்டு சொல்லி சந்தோஷப் பட்டுப் பழகி வாருங்கள்...

மகத்தான மாற்றங்களை அது நமக்குள் கொண்டு வந்து குவிக்கும்.


எங்கள் உணர்வுகளோடு இரண்டறக் கலந்து 

இசைந்து ஒத்துழைப்பை நல்கி வரும் பாளையங் கோட்டை பி.கணபதி

ஐயா அவர்களுக்கும்

கல்லிடைக் குறிச்சி 

நடேஷ் கன்னா ஐயா அவர்களுக்கும் 

பொட்டல் புதூர் நெல்லை குரலோன் அவர்களுக்கும் நிச்சயம் நன்றி சொல்லியே ஆக வேண்டும்.


அவர்களிடம் உரையாடும் போது இந்த விஷயத்தில் அவர்கள் அதிக ஆவல் உள்ளவர்களாகவும் 

வாசகப் பெருமக்கள் மூலம் தமிழ் நாடு இ பேப்பர் குழுமத்தின் 

வலிமையை பன்மடங்காக்க முடியும் என்பதில் உறுதியாக உள்ளனர் என்று நினைக்கும் போதே

நெஞ்சம் சிலிர்க்கிறது.

இந்த மாதிரியான உள்ளங்களை யெல்லாம் ஒருங்கிணைத்து

வெற்றி காண முடியும் 

என்பதில் எள்ளளவும் 

சந்தேகமில்லை.


ஆகவே அன்பான வாசக சொந்தங்களே...

அனைவரும் இந்த அளப்பரிய சங்கமப் பாதையில் பயணிப்போம்.

அருள் தரும் தெய்வம் மூன்றாண்டு சந்தாதாரர்களை, நமது தலைமை ஆசிரியர் அறிவித்துள்ள எளிய --

இனிய பயனுள்ள திட்டத்தில் இணைப்போம்.

அவர்களை விவேகத்தோடு வருமானம் பார்க்கும்

வகையில் செதுக்கி மேம்படுத்துவோம்.

வெற்றி நிச்சயம்.

விளைச்சல் நிச்சயம் 

வேர்களும் முக்கியம்


பி.சிவசங்கர்

கோவை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%