
இன்றைய சிந்தனைக்கு இந்த வாசகத்தை சமர்ப்பித்து விட்டு
விஷயத்துக்கு வருகிறேன்.
நேற்றைய வாசகர் கடிதத்தை முடிக்கும் போது திடீரென்று ஒரு யோசனை தோன்றியது.
நமது தேசிய கீதத்தை
வரி விடாமல் சொல்ல நம்மால் முடியுமா?
சொல்வது இருக்கட்டும்.
தாகூர் எழுதிய தேசிய கீதத்திற்கு எத்தனை வரிகள்?
மனதுக்குள் ஓடிய இந்த இரண்டு கேள்விகளுக்கும் விடை தெரிய வில்லை என்பது வெட்கத்துக்கு உரியது. பகிரங்கமாக ஒப்புக் கொள்கிறேன்.
இது பற்றிய விழிப்புணர்வு நம் வாசக சொந்தங்களுக்கு
( என்னை மாதிரி நீங்கள் தெரியாமல் இருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்)
விழிப்புணர்வு ஊட்டுவோம் என்ற
எண்ணத்தில் தான்
தேசிய கீதத்திற்கு எத்தனை வரிகள் சொல்லுங்கள் பார்ப்போம் என்று கடிதத்தை முடித்திருந்தேன்.
இந்த திடீர் பரிட்சையில் எத்தனை பேர் பாஸ் எத்தனை பேர் பெயில் என்றெல்லாம் கண்டு பிடிக்க முடியாத பரிட்சை என்று தெரிந்து தான் அவ்வாறு குறிப்பிட்டு கேட்டு முடித்திருந்தேன்.
ஒரே ஒரு நண்பரிடம்
இருந்து மட்டும் உடனே
ரெஸ்பான்ஸ் வந்தது.
சென்னை ராம் என்ற அந்த நண்பரும் 13 வரிகள் தானே என்று சந்தேகமாய்த் தான் கேட்டார்.
ஆமாம் ஆமாம் என்று நான் சொன்னதும் அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
கவிதைகள் அனைத்தும் மனதுக்கு இதமாகவும் ஊக்கம் அளிப்பதாகவும் இருந்தது சிறப்பு.
நலம் தரும் மருத்துவம்
பகுதி தொடர்ந்து சர்க்கரை நோயாளிகளின் நலன் குறித்து பேசியது சமூக நலத்தில் தமிழ் நாடு இ பேப்பரின் பொறுப்பும் விருப்பும்
தெரிகிறது.
நன்னிலம் இளங்கோவனின்
நிம்மதியான வாழ்க்கை பொறுப்பில்லாமல் செயல் படும் ஊடகங்களுக்கு சரியான சாட்டையடி..
சபாஷ்!
இன்றைய செய்திகள்
அணி வகுப்பு அருமை.
மக்களவை செய்திகளை வரி விடாமல் படிக்க தூண்டும் வகையில்
தலைப்புகள் கொடுத்து அசத்தி யிருந்த ஆசிரியர் குழுவினருக்கு ஸ்பெஷல் சொட்டு.
தினம் ஒரு தலைவர்கள் பகுதி என்றென்றும் சுவாரஸ்யம் குன்றாத
விறு விறுப்பு.
சிவமுத்து லட்சுமணன் எழுதிய நந்தி கேசுவரனின் மகத்துவம் கட்டுரை
வெகு ஜோர்!
தமிழ் நாடு இ பேப்பரின் மகத்தான இந்தப் பணி மகத்தான வெற்றி பெற மகத்தான மகா சக்தியை தொழுவோம்.
பி.சிவசங்கர்
கோவை
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?