வாசகர் கடிதம் (பி.சிவசங்கர்) 31.08.25

வாசகர் கடிதம் (பி.சிவசங்கர்) 31.08.25



ஒரு சந்தோஷம்...

தமிழ் நாடு இ பேப்பரின் உபயத்தால் 

தென்காசி வாசக சொந்தம் பி.வெங்கடாசலபதி

அவர்களுடன் உரையாடி மகிழும் வாய்ப்பு கிடைத்தது.


இந்த அனுபவத்தை நம் வாசக உறவுகளிடம் பகிர்ந்து கொள்வதில் பெருமை யும் பெருமிதமும் கொள்கிறேன்.

காரணம் அறியும் போது உங்களிடமும் சுவாரஸ்யம் தொற்றிக் கொள்ளும்.


அருள் தரும் தெய்வம் இதழ் சம்பந்தமாக அவரைப் பற்றி நானும் என்னைப் பற்றி அவரும் வாசகர் கடிதத்தில் குறிப்பிட்டது தான் எங்களின் உறவுக்கும் உரையாடலுக்கும் வழி வகுத்தது.


இந்த இணைப்புக்கு பாளையங்கோட்டை 

பி.கணபதி அவர்களும் 

கல்லிடைக்குறிச்சி 

நடேஷ் கன்னா அவர்களும் பெருந்துணையாக இருந்தது மறக்க முடியாத பேரனுபவங்கள் என்றால் மிகையில்லை.


இன்னும் சரியாக சொன்னால் மேலே குறிப்பிட்ட மூவரோடு அடியேனையும் சேர்த்து நான்கு பேருமே அருள் தரும் தெய்வம் இதழின் பேரார்வலர்களாக இருந்தது தான் எங்களின் இந்த இணைப்புக்கு முக்கிய காரணம்.

எப்படி என்கிறீர்களா?

தமிழ் நாடு இ பேப்பர் குழுமத்தின் அற்புதமான செயல் முறைகளில் மனதைப் பறி கொடுத்ததோடு

நில்லாமல் இந்த குழுமத்தின் வளர்ச்சிக்கு நிபந்தனை அற்ற ஆதரவு பங்களிப்பை 

நல்க வேண்டும் என்பதில் ஒத்த கருத்துள்ளவர்களாக 

இருப்பது எவ்வளவு பெரிய விஷயம்.


நினைத்துப் பார்க்கிறேன்...

ஒரு நாள் வாசகர் கடிதத்தில், திடீரென வந்த எண்ணத்தின் காரணமாக தென்காசி 

வாசக நண்பர் பெயரைக் குறிப்பிட்டு எழுதியது...

எப்படிப்பட்ட நல்ல விளைவுகளை உண்டு பண்ணி விட்டது.


இப்போது நாங்கள் 

தெய்வம் இதழ் வளர்ச்சிக்கு ஆக்கப் பூர்வமாக என்னென்ன செய்யலாம் என்று அலைபேசியில் தீவிரமாக பேசிக் கொண்டிருக்கிறோம்.

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்ன தெரியுமா?


இந்த முயற்சிக்கு --

இந்த மெனக்கெடலுக்கு சுய ஆதாயம் தேடும் எந்தவொரு உள் நோக்கமும் கிடையாது என்று எங்களால் அடித்துச் சொல்ல முடியும்.

இந்த எண்ணங்களையும் ஏன் இங்கே பகிரங்கமாக பதிவு செய்கிறேன் என்றால் அதற்கும் கிரியேட்டிவ் ரீதியிலான காரணம் இருக்கிறது என்பதை 

அடக்கத்துடன் கூறிக் கொள்ள விழைகிறேன்.


எந்திரமயமாகிப் போன மனித செயல்பாடுகளில் 

சுயநலம் ஒன்றே பிரதான அடிப்படையாக இருக்கிறது என்பதை வேதனையுடன் வெளிப் படுத்தாமல் இருக்க முடியவில்லை.

எல்லோரும் இப்படி சிந்தித்து இப்படி செயல்பட்டு இந்த பாதையில் தானே பயணிக்கின்றனர்...

நாமும் பத்தோடு பதினொன்றாய் அப்படியே வாழ்ந்து விட்டுப் போவோமே...

என்ற வழக்கமான 

மனோபாவ வாழ்க்கையில் சக்கை தான் உள்ளதே தவிர சாரம் இல்லை என்பதைத் தயவு செய்து கொஞ்சம் நினைத்துப் பார்த்தால் 

நிச்சயம் புத்துணர்வு ஊட்டும் புதுப்புது சிந்தனைகள் உள்ளத்தில் ஊற்றெடுக்கும்.

அரைத்த மாவையே அரைத்துத் தள்ளும் அர்த்தமற்ற அரதப் பழசு வழ வழா வாழ்வில் இருந்து நிச்சயம் விடுதலை கிடைக்கும்.


இப்போது நினைத்துப் பாருங்கள்...

தமிழ் நாடு இ பேப்பர் 

நித்தம் நித்தம் சகல செய்திகளையும் 

செழுமை மிக்க தகவல்களையும் 

நேர்த்தியான சிந்தனைகளையும் 

அள்ளி அள்ளி வழங்கி வருகிறது. இதுவரை கட்டணம் கேட்டு எந்த நெருக்கடியும் வாசகருக்கு தந்ததில்லை.


இந்த நிலையில் குழுமத்தின் சார்பாக ஒரு ஆன்மீக அச்சு இதழை கொண்டு வந்திருக்கிறது.


குறைந்த அளவில் சந்தா அறிவித்துள்ளது.


இதை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் நமக்கு 

வர வேண்டும் அல்லவா?


ஒரு கை ஓசை வருமோ? ஊர் கூடி

திரண்டு நின்று தேர் இழுத்தால் தானே 

நிலைக்கு தேர் வந்து சேரும் நண்பர்களே...


இந்த வகையில் தமிழ் நாடு இ பேப்பர் குழுமத்திற்கு நாம் அளிக்கும் ஆதரவு அவர்களை மேலும் மேலும் ஊக்குவிக்கும்.

வாசகப் பெருமக்களுக்கு இன்னும் இன்னும் என்று நல்ல நல்ல விஷயங்களை நம்மிடம் கொண்டு வந்து சேர்ப்பதற்கு 

வழி வகுக்கும் அல்லவா?


ஆகவே அன்பான வாசக சொந்தங்களே!

வாசகர்கள் சார்பாக நின்று தான் இந்த 

வேண்டுகோளை உங்கள் முன் வைக்கிறோம்.


தெய்வம் இதழுக்கு சந்தாதாரராகி அதன்

சர்குலேஷனை கூட்டுவதன் வாயிலாக 

நமது நலன்கள் மேன்மேலும் வளரும்.

மனித நலப் பண்பில்

திளைத்த பெருமை நம்மை வந்து சேரும்.

வாசகர்கள் அனைவரும் இந்தத் தளத்தில் ஒன்றிணைந்து சங்கமிக்கும் போது 

எத்தனை எத்தனையோ 

நற்காரியங்களை நாம் வென்றெடுக்கலாம்.


இது கருத்துத் திணிப்போ, ஆதாயத்துக்காக 

கொடி கட்டும் செயலோ இல்லை என்பதை தயவு செய்து நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

இ பேப்பர் மேட்டருக்கு 

இடமில்லாத காரணத்தால் இத்துடன் நிறைவு செய்கிறேன்.

நாளை சந்திப்போம்!



பி.சிவசங்கர்

கோவை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%